திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 898

தொடர்ந்து படிக்கread this section continuously

இணையார் திருவடி எட்டெழுத் தாகும்இணையார் கழலிணை யீரைஞ்ச தாகும்இணையார் கழலிணை ஐம்பத்தொன் றாகும்இணையார் கழலிணை ஏழா யிரமே.

உரை

ஈடு இணையில்லாத இறைவனின் திருவடிகளின் உருவமே எட்டெழுத்து மந்திரமாகவும் இருக்கின்றது. அந்தத் திருவடிகளே உயிர்களின் உடலுக்குள் பத்து வகைக் காற்றுக்களாகவும், ஆறு ஆதார சக்கரங்களின் ஐம்பத்தொன்று நாடிகளாகவும் இருக்கின்றன. மேலும் அவையே ஏழாயிரம் மந்திரங்களாகவும், அவற்றின் பரிணாமங்களில் ஏழு கோடி வரையிலும் இருக்கும் மந்திரங்களாகவும் இருக்கின்றன.

வரி வாரியாக

  • வரி 1

    ஈடு இணையில்லாத இறைவனின் திருவடிகளின் உருவமே எட்டெழுத்து மந்திரமாகவும் இருக்கின்றது.

  • வரி 2

    அந்தத் திருவடிகளே உயிர்களின் உடலுக்குள் பத்து வகைக் காற்றுக்களாகவும் இருக்கின்றன.

  • வரி 3

    ஆறு ஆதார சக்கரங்களின் ஐம்பத்தொன்று நாடிகளாகவும் இருக்கின்றன.

  • வரி 4

    ஏழாயிரம் மந்திரங்களாகவும், அவற்றின் பரிணாமங்களில் ஏழு கோடி வரையிலும் இருக்கும் மந்திரங்களாகவும் இருக்கின்றன.

திருமந்திரம் பாடல் #898

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout