தொடர்ந்து படிக்கread this section continuously
ஏழா யிரமாய் இருபதாய் முப்பதாய்ஏழா யிரத்தும் எழுகோடி தானாகிஏழா யிரத்துயிர் எண்ணிலா மந்திரம்ஏழா யிரண்டாக இருக்கின்ற வாறே.
உரைmeaning
முந்தைய பாடலில் உள்ளபடி, ஆதார மந்திரங்கள் ஏழாயிரமாக இருந்தாலும், அதன் பரிணாமங்கள் இருபதாயிரமாகவும் முப்பதாயிரமாகவும் பெருகி, முடிவில் ஏழு கோடி வரையில் இருக்கின்றது. இந்த மந்திரங்கள் அனைத்தும் இறைவனின் சொரூபமாகவே இருக்கின்றது. ஆதாரமான இந்த ஏழாயிரம் மந்திரங்களே ஏழு கோடி மட்டுமில்லாமல், இன்னும் பல பரிணாமங்களில் எண்ண முடியாத அளவு பெருகிக்கொண்டே இருக்கின்றன. இருந்தாலும், அத்தனை மந்திரங்களும் அகார உகாரமாகிய சிவசக்தியிலேயே அடங்கி இருக்கின்றன.
As in the previous verse, though the foundational mantras are seven thousand, their transformations grow to twenty thousand and thirty thousand, and finally to seven crore. All these mantras are themselves the very form of the Lord. This foundational seven thousand does not stop even at seven crore, but keeps growing, in yet further transformations, to an uncountable number. And yet all these mantras remain contained within the Siva-Sakti that is a (அ) and u (உ).
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஆதார மந்திரங்கள் ஏழாயிரமாக இருந்தாலும், அதன் பரிணாமங்கள் இருபதாயிரமாகவும் முப்பதாயிரமாகவும் பெருகும்.
Though the foundational mantras are seven thousand, their transformations grow to twenty thousand and thirty thousand.
- வரி 2Line 2
அவை முடிவில் ஏழு கோடி வரையில் இருக்கின்றன; இந்த மந்திரங்கள் அனைத்தும் இறைவனின் சொரூபமாகவே இருக்கின்றன.
They finally reach seven crore; and all these mantras are themselves the very form of the Lord.
- வரி 3Line 3
ஆதாரமான ஏழாயிரம் மந்திரங்களே ஏழு கோடி மட்டுமில்லாமல், பல பரிணாமங்களில் எண்ண முடியாத அளவு பெருகிக்கொண்டே இருக்கின்றன.
This foundational seven thousand does not stop even at seven crore, but keeps growing, in yet further transformations, to an uncountable number.
- வரி 4Line 4
அத்தனை மந்திரங்களும் அகார உகாரமாகிய சிவசக்தியிலேயே அடங்கி இருக்கின்றன.
And yet all these mantras remain contained within the Siva-Sakti that is a and u.
திருமந்திரம் பாடல் #899





