தொடர்ந்து படிக்கread this section continuously
இருக்கின்ற மந்திரம் ஏழா யிரமாம்இருக்கின்ற மந்திரம் எத்திறம் இல்லைஇருக்கின்ற மந்திரம் சிவன்திரு மேனிஇருக்கின்ற மந்திரம் இவ்வண்ணம் தானே.
உரைmeaning
அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கின்ற மந்திரங்கள் ஏழாயிரமாகும். இந்த மந்திரங்களுக்குள் இல்லாத சக்திகளே இல்லை. இந்த மந்திரங்கள் அனைத்தும் இறைவனின் திருஉருவமாகவே இருக்கின்றன. உள்ளம் உருக சொன்னால் பலனளிக்கக்கூடிய அனைத்து மந்திரங்களும், இறைவனின் திருஉருவமாகவே இருக்கின்றன.
The mantras that are the foundation of all things number seven thousand. There is no power that these mantras do not hold. All of them are themselves the sacred form of the Lord. Every mantra that yields fruit when spoken with a melting heart is, in this way, the Lord's own sacred form.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கின்ற மந்திரங்கள் ஏழாயிரமாகும்.
The mantras that are the foundation of all things number seven thousand.
- வரி 2Line 2
இந்த மந்திரங்களுக்குள் இல்லாத சக்திகளே இல்லை.
There is no power that these mantras do not hold.
- வரி 3Line 3
இந்த மந்திரங்கள் அனைத்தும் இறைவனின் திருஉருவமாகவே இருக்கின்றன.
All of them are themselves the sacred form of the Lord.
- வரி 4Line 4
உள்ளம் உருக சொன்னால் பலனளிக்கக்கூடிய அனைத்து மந்திரங்களும், இறைவனின் திருஉருவமாகவே இருக்கின்றன.
Every mantra that yields fruit when spoken with a melting heart is, in this way, the Lord's own sacred form.
திருமந்திரம் பாடல் #900





