தொடர்ந்து படிக்கread this section continuously
தானே தனக்குத் தகுநட்டந் தானாகும்தானே அகார உகாரம தாய்நிற்கும்தானே ரீங்காரத்து தத்துவக் கூத்துக்குத்தானே உலகில் தனிநடனந் தானே.
உரைmeaning
உலகில் இறைவன் ஆடுகின்ற திருக்கூத்து தாண்டவங்களுக்குத் தகுந்த தாளமாகவும், தாள மந்திரமான ஓங்காரத்தில் அகார உகாரமாகவும், தாளங்களின் ஓசையாகவும், தாண்டவ நடனமாகவும் இறைவன் ஒருவனே இருக்கின்றான்.
For the sacred dances he performs in the world, the Lord alone is the fitting rhythm, is the letters a and u of the rhythm-mantra Omkaram, is the sound of the rhythms, and is the dance itself.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உலகில் இறைவன் ஆடுகின்ற திருக்கூத்து தாண்டவங்களுக்குத் தகுந்த தாளமாக இறைவன் ஒருவனே இருக்கின்றான்.
For the sacred dances he performs in the world, the Lord alone is the fitting rhythm.
- வரி 2Line 2
தாள மந்திரமான ஓங்காரத்தில் அகார உகாரமாகவும் அவனே இருக்கின்றான்.
He is also the letters a and u of the rhythm-mantra Omkaram.
- வரி 3Line 3
தாளங்களின் ஓசையாகவும் அவனே இருக்கின்றான்.
He is the sound of the rhythms.
- வரி 4Line 4
தாண்டவ நடனமாகவும் இறைவன் ஒருவனே இருக்கின்றான்.
And he alone is the dance itself.
திருமந்திரம் பாடல் #901





