திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 891

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆமே சிவங்கள் அகார உகாரங்கள்ஆமே பரங்கள் அறியா விடம்என்பஆமே திருக்கூத் தடங்கிய சிற்பரம்ஆமே சிவகதியே ஆனந்த மாமே.

உரை

பிரணவ மந்திரமான ஓங்காரத்தில் அகாரம் சிவமாகவும் உகாரம் சக்தியாகவும் இருக்கின்றது. இந்த இரண்டு பரம்பொருள்களைப் பற்றி எவ்வளவு சொன்னாலும், அது சிற்றறிவினால் புரிந்துகொள்ள முடியாத ஒன்றாகும். இவற்றை இறைவன் ஆடும் திருக்கூத்தின் உண்மையான ஞானத்தைப் பெற்ற யோகியர்களால் மட்டுமே அறிந்து உணர முடியும். ஞானத்தைப் பெற்று, அகார உகாரமாக இருக்கும் சிவசக்தியை அறிந்து உணர்ந்துவிட்டால், அதுவே அவர்களுக்கு இறைவனிடத்தில் சரணாகதியாகவும், பேரின்பம் கொடுக்கும் பேரானந்தமாகவும் இருக்கும்.

வரி வாரியாக

  • வரி 1

    பிரணவ மந்திரமான ஓங்காரத்தில் அகாரம் சிவமாகவும் உகாரம் சக்தியாகவும் இருக்கின்றது.

  • வரி 2

    இந்த இரண்டு பரம்பொருள்களைப் பற்றி எவ்வளவு சொன்னாலும், அது சிற்றறிவினால் புரிந்துகொள்ள முடியாத ஒன்றாகும்.

  • வரி 3

    இவற்றை இறைவன் ஆடும் திருக்கூத்தின் உண்மையான ஞானத்தைப் பெற்ற யோகியர்களால் மட்டுமே அறிந்து உணர முடியும்.

  • வரி 4

    ஞானத்தைப் பெற்று அகார உகாரமாக இருக்கும் சிவசக்தியை அறிந்து உணர்ந்துவிட்டால், அதுவே அவர்களுக்கு இறைவனிடத்தில் சரணாகதியாகவும், பேரின்பம் கொடுக்கும் பேரானந்தமாகவும் இருக்கும்.

திருமந்திரம் பாடல் #891

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout