தொடர்ந்து படிக்கread this section continuously
தராதல மூலைக்குத் தற்பர மாபரன்தராதலம் வெப்பு நமசி வாயந்தராதலம் சொல்லில் தான்வா சியவாகும்தராதல யோகம் தயாவாசி யாமே.
உரைmeaning
அண்ட சராசரங்களிலுள்ள அனைத்து உயிர்களையும் தாங்கி நிற்கும், ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளாகிய இறை சக்தியே, இந்த உலகத்திலுள்ள உயிர்களுக்குள் ஒரு தளத்தில் நமசிவாய என்றும், அதைச் சுற்றியுள்ள ஒரு தளத்தில் நமவாசிய என்றும், உடலைச் சுற்றியுள்ள ஒரு தளத்தில் வாசிய என்றும், உடலைத் தாண்டி யோக நிலையில் பெறும் கருணையான பரவெளியைச் சுற்றியுள்ள ஒரு தளத்தில் வாசி என்றும் மந்திரச் சொற்களாக இருக்கின்றது.
That divine power, the supreme being without beginning or end, who sustains every being in the moving and unmoving universe, is itself, within the beings of this world, the mantra word namasivaya at one level, namavasiya at the level surrounding it, vasiya at the level surrounding the body, and vasi at the level surrounding the compassionate great space attained beyond the body in the yogic state.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
அண்ட சராசரங்களிலுள்ள அனைத்து உயிர்களையும் தாங்கி நிற்கும், ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளாகிய இறை சக்தி,
That divine power, the supreme being without beginning or end, who sustains every being in the moving and unmoving universe,
- வரி 2Line 2
உலகத்திலுள்ள உயிர்களுக்குள் ஒரு தளத்தில் நமசிவாய என்றும், அதைச் சுற்றி நமவாசிய என்றும் மந்திரச் சொல்லாக இருக்கின்றது.
is itself, within the beings of this world, the mantra word namasivaya at one level, and namavasiya at the level surrounding it.
- வரி 3Line 3
உடலைச் சுற்றியுள்ள ஒரு தளத்தில் வாசிய என்றும் மந்திரச் சொல்லாக இருக்கின்றது.
It is also the mantra word vasiya at the level surrounding the body.
- வரி 4Line 4
உடலைத் தாண்டி யோக நிலையில் பெறும் கருணையான பரவெளியைச் சுற்றியுள்ள ஒரு தளத்தில் வாசி என்றும் இருக்கின்றது.
And it is the mantra word vasi at the level surrounding the compassionate great space attained beyond the body in the yogic state.
திருமந்திரம் பாடல் #890





