திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 889

தொடர்ந்து படிக்கread this section continuously

தானே பரஞ்சுடர் தத்துவ மாய்நிற்குந்தானே அகார உகாரம தாய்நிற்குந்தானே பரஞ்சுடர் தத்துவக் கூத்துக்குத்தானே தனக்குத் தராதலமுந் தானே.

உரை

ஆதியும் அந்தமும் இல்லாத இறை சக்தியாகிய பரம்பொருளே, பேரொளியின் ஒளி உருவத் தத்துவமாகவும், ஓங்கார மந்திரத்தின் அகார உகார எழுத்துக்களாகவும், பேரொளியின் ஒளி உருவத் தாண்டவத் திருக்கூத்தாகவும் நிற்கின்றது. அது அண்ட சராசரங்கள் அனைத்தையும் தாங்கி, அருட் சக்தியாகிய தன்னையும் தானே தாங்கி நிற்கின்றது.

வரி வாரியாக

  • வரி 1

    ஆதியும் அந்தமும் இல்லாத இறை சக்தியாகிய பரம்பொருளே பேரொளியின் ஒளி உருவத் தத்துவமாக நிற்கின்றது.

  • வரி 2

    அதுவே ஓங்கார மந்திரத்தின் அகார உகார எழுத்துக்களாகவும் நிற்கின்றது.

  • வரி 3

    அதுவே பேரொளியின் ஒளி உருவத் தாண்டவத் திருக்கூத்தாகவும் நிற்கின்றது.

  • வரி 4

    அது அண்ட சராசரங்கள் அனைத்தையும் தாங்கி, அருட் சக்தியாகிய தன்னையும் தானே தாங்கி நிற்கின்றது.

திருமந்திரம் பாடல் #889

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout