தொடர்ந்து படிக்கread this section continuously
ஓரெழுத் தாலே உலகெங்குந் தானாகிஈரெழுத் தாலே இசைந்தங் கிருவராய்மூவெழுத் தாலே முளைக்கின்ற சோதியைமாவெழுத் தாலே மயக்கம துற்றதே.
உரைmeaning
ஒற்றை எழுத்து மந்திரத்தால் அண்ட சராசரங்கள் அனைத்தும் தாமாகவே விரிந்து பரவி இருக்கும் இறை சக்தி, இரண்டு எழுத்துக்களால் ஒன்றாக இணைந்த இருவராகவும், பிறகு மூன்று எழுத்துக்களால் ஒன்றாகி மாபெரும் ஜோதியாகவும் உருவெடுக்கின்றது. இதனை, பெரிய எழுத்தாகிய மாயையால் மறைக்கப்பட்டிருக்கும் உலகத்தவர் அறிந்துகொள்ளாமல், இறை சக்தியை பலவற்றில் தேடி மயங்குகின்றார்கள்.
By the single syllable mantra, the divine power that is itself spread out and pervading throughout the universe takes shape, by two syllables, as a pair joined as one, and then, by three syllables, unites as one and rises as a great flame of light. Those in the world who are covered by the great syllable that is maya fail to know this, and go astray searching for the divine power in many places.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஒற்றை எழுத்து மந்திரத்தால் அண்ட சராசரங்கள் அனைத்தும் தாமாகவே விரிந்து பரவி இருக்கும் இறை சக்தி,
By the single syllable mantra, the divine power that is itself spread out and pervading throughout the universe,
- வரி 2Line 2
இரண்டு எழுத்துக்களால் ஒன்றாக இணைந்த இருவராகவும்,
takes shape, by two syllables, as a pair joined as one,
- வரி 3Line 3
பிறகு மூன்று எழுத்துக்களால் ஒன்றாகி மாபெரும் ஜோதியாகவும் உருவெடுக்கின்றது.
and then, by three syllables, unites as one and rises as a great flame of light.
- வரி 4Line 4
இதனை, பெரிய எழுத்தாகிய மாயையால் மறைக்கப்பட்டிருக்கும் உலகத்தவர் அறிந்துகொள்ளாமல், இறை சக்தியை பலவற்றில் தேடி மயங்குகின்றார்கள்.
Those in the world who are covered by the great syllable that hides it fail to know this, and go astray searching for the divine power in many places.
திருமந்திரம் பாடல் #885
1 / 2





