தொடர்ந்து படிக்கread this section continuously
போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தைத்தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடிசாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தைஏற்றுகின் றேன்நம் பிரானின்ஓர் எழுத்தே.
உரைmeaning
ஞானங்களிலெல்லாம் மேலானது என்று ஞானியர் போற்றும் சிவஞானத்தையே யான் போற்றிக் கொண்டாடுகின்றேன். எனது சிந்தனையில் அனைத்திற்கும் தலைவனான இறைவனின் போற்றுதற்குரிய திருவடிகளையே சிந்தித்து, சிவஞானத்தில் தெளிவு பெறுகின்றேன். யான் தெளிந்து பெற்ற சிவயோகத்தை உங்களுக்கும் சொல்கின்றேன், கேளுங்கள். சிவயோகம் என்பது, இறைவனைப் போற்றும் மந்திரங்கள் அனைத்திற்கும் மேலான ஒற்றை எழுத்து மந்திரத்தை உச்சரிக்காமல் எண்ணத்தில் வைத்து, மூச்சுக்காற்றோடு இணைத்து ஓயாது நினைந்துகொண்டே இருப்பதாகும். இதையே யானும் எப்போதும் செய்துகொண்டே இருக்கின்றேன்.
I praise and celebrate Siva jnanam, which the wise honour as supreme among all forms of knowledge. In my thought I dwell only on the praiseworthy sacred feet of the Lord who is master of all, and gain clarity in that Siva jnanam. The Siva yoga I have thus gained in clarity, I now tell you too, so listen. Siva yoga is this: holding in the mind, without uttering it aloud, the single syllable mantra that stands above every mantra that praises the Lord, and dwelling on it without pause, joined with the breath. This is what I myself do at all times.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஞானங்களிலெல்லாம் மேலானது என்று ஞானியர் போற்றும் சிவஞானத்தையே யான் போற்றிக் கொண்டாடுகின்றேன்.
I praise and celebrate Siva jnanam, which the wise honour as supreme among all forms of knowledge.
- வரி 2Line 2
எனது சிந்தனையில் அனைத்திற்கும் தலைவனான இறைவனின் போற்றுதற்குரிய திருவடிகளையே சிந்தித்து, சிவஞானத்தில் தெளிவு பெறுகின்றேன்.
In my thought I dwell only on the praiseworthy sacred feet of the Lord who is master of all, and gain clarity in that Siva jnanam.
- வரி 3Line 3
யான் தெளிந்து பெற்ற சிவயோகத்தை உங்களுக்கும் சொல்கின்றேன், கேளுங்கள்.
The Siva yoga I have thus gained in clarity, I now tell you too, so listen.
- வரி 4Line 4
சிவயோகம் என்பது, ஒற்றை எழுத்து மந்திரத்தை உச்சரிக்காமல் எண்ணத்தில் வைத்து, மூச்சுக்காற்றோடு இணைத்து ஓயாது நினைந்துகொண்டே இருப்பதாகும்; இதையே யானும் எப்போதும் செய்துகொண்டே இருக்கின்றேன்.
Siva yoga is holding a single syllable mantra in the mind without uttering it, joined with the breath, without pause; this is what I myself do at all times.
திருமந்திரம் பாடல் #884
1 / 2





