திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 886

தொடர்ந்து படிக்கread this section continuously

தேவர் உறைகின்ற சிற்றம் பலம்என்றும்தேவர் உறைகின்ற சிதம்பரம் என்றும்தேவர் உறைகின்ற திருவம் பலமேதேவர் உறைகின்ற தென்பொதுவே ஆமே.

உரை

தேவாதி தேவர்களுக்கெல்லாம் தலைவனான இறைவன் தங்கியிருக்கும் இடமே சிற்றம்பலம் என்றும், சிதம்பரம் என்றும், திரு அம்பலம் என்றும், தென்நாடு என்றும் போற்றப்படுகின்றது. அந்தத் தென்நாட்டில் வீற்றிருக்கும் இறை சக்தி உலகத்திலுள்ள அனைவருக்கும் பொதுவானது ஆகும்.

வரி வாரியாக

  • வரி 1

    தேவாதி தேவர்களுக்கெல்லாம் தலைவனான இறைவன் தங்கியிருக்கும் இடமே சிற்றம்பலம் என்றும்,

  • வரி 2

    சிதம்பரம் என்றும்,

  • வரி 3

    திரு அம்பலம் என்றும்,

  • வரி 4

    தென்நாடு என்றும் போற்றப்படுகின்றது; அங்கு வீற்றிருக்கும் இறை சக்தி உலகத்திலுள்ள அனைவருக்கும் பொதுவானது ஆகும்.

திருமந்திரம் பாடல் #886

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout