தொடர்ந்து படிக்கread this section continuously
அமலம் பதிபசு பாசம் ஆகமம்அமலம் திரோதாயி யாகுமா னந்தம்அமலம் சொல்ஆணவ மாயை காமியம்அமலம் திருக்கூத்தா டுமிடந் தானே.
உரைmeaning
பதி பசு பாசம் என்ற சைவ சித்தாந்தத்தை உணர்வது அமலமாகும். ஆகமங்களை உணர்வதின் மூலம் மாயையை நீங்கிக் கிடைக்கும் பேரானந்தம் அமலமாகும். ஆணவம், மாயை, கன்மம் ஆகிய மூன்று மலங்களும் இல்லாதது அமலமாகும். இறைவன் திருக்கூத்தாடுகின்ற இடங்களெல்லாம் மலமாசுக்கள் இல்லாத தூய்மையான அமலமாகும்.
Realizing the Saiva Siddhanta teaching of Pati, Pasu and Pasam is amalam, taintlessness. The supreme bliss gained by realizing the Agamas and passing beyond maya is amalam. The absence of the three malas, anavam, maya and karma, is amalam. And every place where the Lord dances his sacred dance is amalam, a purity free of the stain of the malas.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பதி பசு பாசம் என்ற சைவ சித்தாந்தத்தை உணர்வது அமலமாகும்.
Realizing the Saiva Siddhanta teaching of Pati, Pasu and Pasam is amalam, taintlessness.
- வரி 2Line 2
ஆகமங்களை உணர்வதின் மூலம் மாயையை நீங்கிக் கிடைக்கும் பேரானந்தம் அமலமாகும்.
The supreme bliss gained by realizing the Agamas and passing beyond maya is amalam.
- வரி 3Line 3
ஆணவம், மாயை, கன்மம் ஆகிய மூன்று மலங்களும் இல்லாதது அமலமாகும்.
The absence of the three malas, anavam, maya and karma, is amalam.
- வரி 4Line 4
இறைவன் திருக்கூத்தாடுகின்ற இடங்களெல்லாம் மலமாசுக்கள் இல்லாத தூய்மையான அமலமாகும்.
And every place where the Lord dances his sacred dance is amalam, a purity free of the stain of the malas.
திருமந்திரம் பாடல் #895





