எய்து மதிக்கலை சூக்கத்தி லேறியேஎய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள்எய்துங் கலை போல ஏறி இறங்குமாந்துய்யது குக்கத்துத் தூலத்த காயமே.
பாடல் 851 — உரைVerse 851 — meaning
எண்ணங்கள் தூல உடலில் இருந்து சூக்கும உடலுக்கு ஏறியும், சூக்கும உடலில் இருந்து தூல உடலுக்கு இறங்கியும் வரும். இது சந்திரனின் வளர்பிறை தேய்பிறை போன்று இருக்கும். சூக்கும உடல் தூய்மை அடைவதற்கு ஏற்பத் தூல உடம்பும் தூய்மை அடையும்.
Thoughts rise from the gross body to the subtle body, and descend again from the subtle body to the gross body. This is like the moon's waxing and waning. As the subtle body attains purity, the gross body too attains purity accordingly.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
எண்ணங்கள் தூல உடலில் இருந்து சூக்கும உடலுக்கு ஏறியும்,
Thoughts rise from the gross body to the subtle body,
- வரி 2Line 2
சூக்கும உடலில் இருந்து தூல உடலுக்கு இறங்கியும் வரும்.
and descend again from the subtle body to the gross body.
- வரி 3Line 3
இது சந்திரனின் வளர்பிறை தேய்பிறை போன்று இருக்கும்.
This is like the moon's waxing and waning.
- வரி 4Line 4
சூக்கும உடல் தூய்மை அடைவதற்கு ஏற்பத் தூல உடம்பும் தூய்மை அடையும்.
As the subtle body attains purity, the gross body too attains purity accordingly.




