திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 863

மூன்றாம் தந்திரம்21. சந்திர யோகம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஒன்றிய ஈரெண் கலையும் உடலுறநின்றது கண்டும் நினைக்கிலர் நீசர்கள்கன்றிய காலன் கருக்குழி வைத்தபின்சென்று அதில்வீழ்வர் திகைப்பொழி யாரே.

உரை

வானத்தில் இருக்கும் வளர்பிறை தேய்பிறை சந்திர மாற்றங்களின் பதினாறு கலைகளும் உயிர்களின் உடலுக்குள்ளும் இருப்பதைக் கண்டறிந்த பின்னரும், அதைக் கொண்டு இறைவனை நினைத்து சந்திர யோகம் செய்து பிறவியில்லாத பெருவாழ்வை அடைய முயற்சி செய்யாத கீழ்மையான குணமுடையோரைக் கண்ட எமன், "இவர்கள் இனி வாழ்ந்து என்ன பயன்" என்று அவர்களை மரணப்பிடியில் சிக்க வைத்து அடுத்த பிறவி எடுக்கச் செய்கிறான். அத்தகையோரும் மீண்டும் பிறவிச் சுழற்சியில் சென்று வீழ்ந்து, எப்படித் தப்பிப்பது என்று திகைத்தே இருக்கிறார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    வானத்தில் இருக்கும் வளர்பிறை தேய்பிறை சந்திர மாற்றங்களின் பதினாறு கலைகளும் உயிர்களின் உடலுக்குள்ளும் இருக்கின்றன.

  • வரி 2

    அதைக் கண்டறிந்த பின்னரும், அதைக் கொண்டு இறைவனை நினைத்து முயற்சி செய்யாத கீழ்மையான குணமுடையோரை,

  • வரி 3

    கொடிய எமன் கண்டு, இவர்கள் இனி வாழ்ந்து என்ன பயன் என்று எண்ணி, மரணம் என்னும் கருவறைக் குழியில் அவர்களைச் சிக்க வைக்க,

  • வரி 4

    அவர்கள் அதில் வீழ்ந்து, மீண்டும் பிறவிச் சுழற்சியில் அகப்பட்டு, எப்படித் தப்பிப்பது என்று திகைத்தே இருக்கிறார்கள்.

திருமந்திரம் பாடல் #863

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout