திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 879

மூன்றாம் தந்திரம்21. சந்திர யோகம்

தொடர்ந்து படிக்கread this section continuously

உணர்விந்து சோணி உறவினன் வீசும்புணர்விந்து வீசுங் கதிரிற் குறையில்உணர்வும் உடம்பும் உவையொக்க நிற்கில்உணர்வும் உடம்பும் ஒருகால் விடாவே.

உரை

உணர்வுக்கு வாயிலாக உள்ள ஒளியும் ஒலியும் ஒன்றாகக் கலக்க, சூரியக் கலையின் கதிர்கள் குறையுமானால், ஒளி தலைக்கு மேலே தோன்றும். ஒளியாகிய நுண்ணுடலும் உணர்வும் ஒன்றானபின், யோகிக்கு உடல் அழியாது என்கிறது பாடல்.

வரி வாரியாக

  • வரி 1

    உணர்வுக்கு வாயிலாக உள்ள ஒளியும் ஒலியும் ஒன்றாகக் கலக்க,

  • வரி 2

    சூரியக் கலையின் கதிர்கள் குறையுமானால்,

  • வரி 3

    ஒளி தலைக்கு மேலே தோன்றும்; ஒளியாகிய நுண்ணுடலும் உணர்வும் ஒன்றாக நிற்குமானால்,

  • வரி 4

    யோகியின் உடல் அழியாது என்கிறது பாடல்.

திருமந்திரம் பாடல் #879

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout