திருமூலர் அருளிய திருமந்திரம்
20. அமுரி தாரணை

மூன்றாம் தந்திரம் பாடல் 845–850 (6 பாடல்கள்)

உடலிற் கிடந்த உறுதிக் குடிநீர்க்கடலிற் சிறுகிணற் றேமிட் டாலொக்கும்உடலில் ஒருவழி ஒன்றுக் கிறைக்கில்நடலைப் படாதுயிர் நாடலு மாமே.

தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்ஒளிதரும் ஓராண்டில் ஊனமொன் றில்லைவளியுறும் எட்டில் மனமும் ஒடுங்கும்களிதரும் காயம் கனகம தாமே.

நூறும் மிளகு நுகருஞ் சிவத்தினீர்மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்கள்தேறில் இதனைத் தெளியுச்சி கப்பிடின்மாறும் இதற்கு மறுமயிரும் ஆமே.

கரையரு கேநின்ற கானல் உவரிவரைவரை என்பர் மதியிலா மாந்தர்நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்குநரைதிரை மாறும் நமனு மில்லையே.

அளக நன்னுத லாயோ ரதிசயங்களவு காயங் கலந்தஇந் நீரிலேமிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்இளகும் மேனி இருளுங் கபாலமே.

வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்ஆதி மருந்தென் றறிவார் அகலிடஞ்சோதி மருந்திது சொல்லவும்வொண் ணாதே.

மூலப்பாடல் மட்டும்

திருமந்திரம் பாடல் #845

1 / 6

0:000:00
20. அமுரி தாரணைபாடல் 845

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout