திருமூலர் அருளிய திருமந்திரம்
19 பரியாங்க யோகம்

மூன்றாம் தந்திரம் பாடல் 837–844 (8 பாடல்கள்)

திருத்திப் புதனைத் திருத்தல்செய் வார்க்குக்கருத்தழ காலே கலந்தங் கிருக்கில்வருத்தமு மில்லையா மங்கை பங்கற்குந்துருத்தியுள் வெள்ளியுஞ் சோரா தெழுமே.

எழுகின்ற தீயைமுன் னேகொண்டு சென்றிட்டால்மெழுகுரு கும்பரி செய்திடும் மெய்யேஉழுகின்ற தில்லை ஒளியை அறிந்தபின்விழுகின்ற தில்லை வெளியறி வார்க்கே.

வெளியை அறிந்து வெளியி னடுவேஒளியை அறிவி னுளிமுறி யாமேதெளிவை அறிந்து செழுநந்தி யாலேவெளியை அறிந்தனன் மேலறி யேனே.

மேலாந் தலத்தில் விரிந்தவ ராரெனின்மாலாந் திசைமுகன் மாநந்தி யாயவர்நாலா நிலத்தி னடுவான வப்பொருள்மேலா யுரைத்தனர் மின்னிடை யாளுக்கே

மின்னிடை யாளுமின் னாளனுங் கூட்டத்துப்பொன்னிடை வட்டத்தின் உள்ளே புகப்பெய்துதன்னொடு தன்னைத் தலைப்பெய்ய வல்லிரேல்மண்ணிடைப் பல்லூழி வாழலு மாமே.

வாங்க லிறுதலை வாங்கலில் வாங்கியவீங்க வலிக்கும் விரகறி வாரில்லைவீங்க வலிக்கும் விரகறி வாளரும்ஓங்கிய தன்னை உதம்பண்ணி னாரே.

உதமறிந் தங்கே ஒருசுழிப் பட்டாற்கதமறிந் தங்கே கபாலங் கறுக்கும்இதமறிந் தென்றும் இருப்பாள் ஒருத்திபதமறிந் தும்முளே பார்கடிந் தாளே.

பாரில்லை நீரில்லை பங்கயம் ஒன்றுண்டுதாரில்லை வேரில்லை தாமரை பூத்ததுஊரில்லை காணும் ஒளியது ஒன்றுண்டுகீழில்லை மேலில்லை கேள்வியிற் பூவே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #837

1 / 8

0:000:00
19 பரியாங்க யோகம்பாடல் 837

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com