பூசு வனவெல்லாம் பூசிப் புலர்த்தியவாச நறுங்குழலில் மாலையுஞ் சாத்திக்காயக் குழலி கலவியொ டுங்கலந்தூசித் துளையுறத் தூங்காது போகமே.
போகத்தை யுன்னவே போகாது வாயுவுமேகத்த வெள்ளியு மீளும் வியாழத்தில்சூதொத்த மென்முலை யாளுநற் சூதனுந்தாதிற் குழைந்து தலைக்கண்ட வாறே.
கண்டனுங் கண்டியுங் காதல்செய் யோகத்துமண்டலங் கொண்டிரு பாலும் வெளிநிற்கும்வண்டியை மேற்கொண்டு வானீர் உருட்டிடத்தண்டொரு காலுந் தளராது அங்கமே.
அங்கப் புணர்ச்சியு மாகின்ற தத்துவமங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப்பங்கப் படாமற் பரிகரித் துத்தம்மைத்தங்கிக் கொடுக்கத் தலைவனு மாமே.
தலைவனு மாயிடுந் தன்வழி ஞானந்தலைவனு மாயிடுந் தன்வழி போகந்தலைவனு மாயிடுந் தன்வழி யுள்ளேதலைவனு மாயிடுந் தன்வழி அஞ்சே.
அஞ்சு கடிகைமேல் ஆறாங் கடிகையில்துஞ்சு தொன்றத் துணைவி துணைவன்பால்நெஞ்சு நிறைந்தது வாய்கொளா தென்றதுபஞ்ச கடிகை பரியங்க யோகமே.
பரியங்க யோகத்துப் பஞ்ச கடிகைஅரியஇவ் யோகம் அடைந்தார்க் கல்லதுசரிவளை முன்கைச்சி சந்தனக் கொங்கைஉருவித் தழுவ ஒருவர்க்கொண் ணாதே.
ஒண்ணாத யோகத்தை உற்றவ ராரென்னில்விண்ணார்ந்த கங்கை விரிசடை வைத்தவன்பண்ணார் அமுதினைப் பஞ்ச கடிகையில்எண்ணா மென்றெண்ணி இருந்தான் இருந்ததே.
ஏய்ந்த பிராயம் இருபது முப்பதும்வாய்ந்த குழலிக்கு மன்னர்கு மானந்தம்வாய்ந்த குழலியோ டைந்து மலர்ந்திடச்சோர்ந்தன சித்தமுஞ் சோர்வில்லை வெள்ளிக்கே.
வெள்ளி யுருகிப் பொன்வழியே ஓடாமேகள்ளத்தட் டானார் கரியிட்டு மூடினார்கொள்ளி பறியக் குழல்வழி யேசென்றுவள்ளியுண் ணாவில் அடக்கியேவைத் தாரே.
வைத்த இருவருந் தம்மின் மகிழ்ந்துடன்சித்தங் கலங்காது செய்கின்ற ஆனந்தம்பத்து வகைக்கும் பதினெண் கணத்துக்கும்வித்தக னாய்நிற்கும் வெங்கதி ரோனே.
வெங்கதி ருக்குஞ் சனிக்கும் இடைநின்றநங்கையைப் புல்லிய நம்பிக்கோ ரானந்தந்தங்களிற் பொன்னிடை வெள்ளிதா ழாமுனந்திங்களிற் செவ்வாயை புதைத்திருந் தாரே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #825
1 / 12




