திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 852

மூன்றாம் தந்திரம்21. சந்திர யோகம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கியுள்ஆகின்ற ஈரெட்டொ டாறிரண் டீரைந்துள்ஏகின்ற வக்கலை யெல்லா மிடைவழிஆகின்ற யோகியர் அறிந்த அறிவே.

உரை

உயிர்களின் உடலில் இருக்கும் சந்திர மண்டலத்திற்குப் பதினாறு கலைகளும், சூரிய மண்டலத்திற்குப் பன்னிரண்டு கலைகளும், அங்கி மண்டலத்திற்குப் பத்துக் கலைகளும் உள்ளன. இவை அனைத்தும் சென்றுவரும் இடைவழியை யோகியர் நன்கு அறிந்திருக்கிறார்கள். (கலைகள் என்பது மூச்சுக்காற்று தானாக உள்ளேயும் வெளியேயும் செல்லும் விதத்தைக் குறிப்பதாகும்.)

வரி வாரியாக

  • வரி 1

    உயிர்களின் உடலில் இருக்கும் சந்திர மண்டலத்திற்குப் பதினாறு கலைகளும்,

  • வரி 2

    சூரிய மண்டலத்திற்குப் பன்னிரண்டு கலைகளும், அங்கி மண்டலத்திற்குப் பத்துக் கலைகளும் உள்ளன.

  • வரி 3

    இவை அனைத்தும் சென்றுவரும் இடைவழியை யோகியர் நன்கு அறிந்திருக்கிறார்கள்.

  • வரி 4

    (கலைகள் என்பது மூச்சுக்காற்று தானாக உள்ளேயும் வெளியேயும் செல்லும் விதத்தைக் குறிப்பதாகும்.)

திருமந்திரம் பாடல் #852

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout