திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 903

தொடர்ந்து படிக்கread this section continuously

செம்புபொன் னாகுஞ் சிவாய நமஎன்னில்செம்புபொன் னாகத் திரண்டது சிற்பரஞ்செம்புபொன் னாகும் ஸ்ரீயுங் கிரீயுமெனச்செம்புபொன் னாவது திருவம் பலமே.

உரை

முந்தைய பாடலில் உள்ளபடி, சிவாயநம என்னும் மந்திரத்தால் செம்பு போன்ற கடினமான உடல் பொன் போல் ஜொலிக்கின்ற ஒளி உடம்பு ஆகிவிடும் என்று இப்பாடல் கூறுகிறது. அதன்பின், இறைவன் ஆடுகின்ற சித்தர்களின் அம்பலத்தில் சாதகர்களின் எண்ணங்கள் சென்று சேரும். பிறகு, அகார உகாரத்தின் எழுத்து வடிவங்களான ஸ்ரீம், கிரீம் என்னும் மந்திரங்கள் சாதகர்களின் எண்ணத்தில் உருவாகும். அதன் பிறகு, சாதகர்களின் பொன்னாக மாறிய ஒளி உடம்பு இறைவன் திருக்கூத்து ஆடுகின்ற திருஅம்பலமாகும்.

வரி வாரியாக

  • வரி 1

    முந்தைய பாடலில் உள்ளபடி, சிவாயநம என்னும் மந்திரத்தால் செம்பு போன்ற கடினமான உடல் பொன் போல் ஜொலிக்கின்ற ஒளி உடம்பு ஆகிவிடும் என்று இப்பாடல் கூறுகிறது.

  • வரி 2

    அதன்பின் இறைவன் ஆடுகின்ற சித்தர்களின் அம்பலத்தில் சாதகர்களின் எண்ணங்கள் சென்று சேரும் என்கிறது.

  • வரி 3

    பிறகு அகார உகாரத்தின் எழுத்து வடிவங்களான ஸ்ரீம், கிரீம் என்னும் மந்திரங்கள் சாதகர்களின் எண்ணத்தில் உருவாகும்.

  • வரி 4

    அதன்பிறகு சாதகர்களின் பொன்னாக மாறிய ஒளி உடம்பு இறைவன் திருக்கூத்து ஆடுகின்ற திருஅம்பலமாகும்.

திருமந்திரம் பாடல் #903

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout