தொடர்ந்து படிக்கread this section continuously
பொற்பாதம் காணலாம் புத்திர ருண்டாகும்பொற்பாதத் தாணையே செம்புபொன் னாயிடும்பொற்பாதங் காணத் திருமேனி யாயிடும்பொற்பாத நன்னடஞ் சிந்தனை சொல்லுமே.
உரைmeaning
முந்தைய பாடலில் உள்ளபடி, சாதகர்களின் உடம்பே இறைவனின் பொன்னான பாதங்களாக மாறிய பிறகு, இறைவனும் தானும் வேறில்லை எனும் ஞானம் கிடைக்கும் என இப்பாடல் கூறுகிறது. செம்பு போன்ற உடல் பொன் போன்ற ஒளி உடம்பாக ஆகும் என்பதும் இறைவனின் திருவடி மேல் ஆணையாகக் கூறப்படுகிறது. இறைவனின் திருவடிகளைத் தமக்குள் தரிசிக்க, இறைவனின் திருஉருவமே தாமாக உணரலாம். அவ்வாறு தரிசித்த சாதகர்களுக்குப் பேரறிவு ஞானம் அடையும் வழிகள் சிந்தனையாகக் கிடைக்கும்.
As in the previous verse, this verse says that once a practitioner's body has become the Lord's own golden feet, the wisdom that the Lord and oneself are not different is gained. It is also declared, as though upon the Lord's own sacred feet, that the body, hard like copper, becomes a body of light like gold. To behold the Lord's sacred feet within oneself, one may realize the Lord's own sacred form as one's own. And to a practitioner who has beheld it so, the paths to attaining great wisdom come as thought.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
முந்தைய பாடலில் உள்ளபடி, சாதகர்களின் உடம்பே இறைவனின் பொன்னான பாதங்களாக மாறிய பிறகு, இறைவனும் தானும் வேறில்லை எனும் ஞானம் கிடைக்கும் என இப்பாடல் கூறுகிறது.
As in the previous verse, this verse says that once a practitioner's body has become the Lord's own golden feet, the wisdom that the Lord and oneself are not different is gained.
- வரி 2Line 2
செம்பு போன்ற உடல் பொன் போன்ற ஒளி உடம்பாக ஆகும் என்பதும் இறைவனின் திருவடி மேல் ஆணையாகக் கூறப்படுகிறது.
It is also declared, as though upon the Lord's own sacred feet, that the body, hard like copper, becomes a body of light like gold.
- வரி 3Line 3
இறைவனின் திருவடிகளைத் தமக்குள் தரிசிக்க, இறைவனின் திருஉருவமே தாமாக உணரலாம்.
To behold the Lord's sacred feet within oneself, one may realize the Lord's own sacred form as one's own.
- வரி 4Line 4
அவ்வாறு தரிசித்த சாதகர்களுக்குப் பேரறிவு ஞானம் அடையும் வழிகள் சிந்தனையாகக் கிடைக்கும்.
And to a practitioner who has beheld it so, the paths to attaining great wisdom come as thought.
திருமந்திரம் பாடல் #907





