தொடர்ந்து படிக்கread this section continuously
அவ்வென்ற போதினில் உவ்வெழுத் தாலித்தால்உவ்வென்ற முத்தி யுருகிக் கலந்திடும்மவ்வென் றென்னுள்ளே வழிபட்ட நந்தியைஎவ்வணஞ் சொல்லுகேன் எந்தை இயற்கையே.
உரைmeaning
முன்பு சொன்னபடி 'அ' வடிவில் மாசில்லாத தூய்மையான தங்கத்தைப் போல் இருக்கும் இறைவனை 'உ' எழுத்தால் ஆராதித்தால், 'உ' எழுத்தின் உச்சகட்டப் பரிபூரண நிலையில் 'அ' எழுத்தோடு ஒன்றாகக் கலந்து 'ம' எழுத்தாக மாறி நிற்பான். 'ம' வடிவில் இருக்கும் இறைவன் குருவாக நின்று வழிகாட்டும் முறைப்படி செயல்பட்டால், ஓங்காரத்தின் உச்சகட்டப் பரிபூரண நிலையை அடைந்து, அதனால் கிடைக்கும் பேரின்பம் வார்த்தைகளால் விவரிக்க இயலாத அளவு இருக்கும்.
As before, if one worships with the letter u the God who is, in the form of a, like pure unblemished gold, then at the highest, most perfect state of the letter u, that God blends into oneness with the letter a and stands transformed as the letter ma. If one acts according to the guidance of that God who, in the form of ma, stands as one's Guru, one attains the highest, most perfect state of Omkara, and the supreme bliss gained thereby is beyond what words can describe.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
அவ்வென்ற போதினில் உவ்வெழுத் தாலித்தால் என்பது, முன்பு சொன்னபடி 'அ' வடிவில் மாசில்லாத தூய்மையான தங்கத்தைப் போல் இருக்கும் இறைவனை 'உ' எழுத்தால் ஆராதிப்பதைச் சொல்லும்.
As before, if one worships with the letter u the God who is, in the form of a, like pure unblemished gold,
- வரி 2Line 2
உவ்வென்ற முத்தி யுருகிக் கலந்திடும் என்பது, 'உ' எழுத்தின் உச்சகட்டப் பரிபூரண நிலையில் அந்த இறைவன் 'அ' எழுத்தோடு ஒன்றாகக் கலப்பதைச் சொல்லும்.
then at the highest, most perfect state of the letter u, that God blends into oneness with the letter a
- வரி 3Line 3
மவ்வென் றென்னுள்ளே வழிபட்ட நந்தியை என்பது, 'ம' எழுத்தாக மாறி நின்று குருவாகி வழிகாட்டும் இறைவனைச் சொல்லும்.
and stands transformed as the letter ma, God as Guru guiding the seeker who worships him within,
- வரி 4Line 4
எவ்வணஞ் சொல்லுகேன் எந்தை இயற்கையே என்பது, அந்த வழிகாட்டுதலின்படி செயல்பட்டால் கிடைக்கும் பேரின்பம் வார்த்தைகளால் விவரிக்க இயலாத அளவு இருக்கும் என்பதைச் சொல்லும்.
and if one acts by that guidance, one attains the highest state of Omkara, whose resulting bliss is beyond what words can describe.
திருமந்திரம் பாடல் #953





