திருமூலர் அருளிய திருமந்திரம்
3. அருச்சனை

நான்காம் தந்திரம் பாடல் 1003–1014 (12 பாடல்கள்)

அம்புய நீலங் கழுநீ ரணிநெய்தல்வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம்தும்பை வகுளஞ் சுரபுன்னை மல்லிகைசெண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே.

சாங்கம தாகவே சந்தொடு சந்தனந்தேங்கமழ் குங்குமங் கர்ப்பூரங் காரகிற்பாங்கு படப்பனி நீராற் குழைத்துவைத்தாங்கே அணிந்துநீர் அர்ச்சியும் அன்பொடே.

அன்புட னேநின் றமுதமும் ஏற்றியேபொன்செய் விளக்கும் புகைதீபந் திசைதொறுந்துன்பம் அகற்றித் தொழுவோர் நினையுங்கால்இன்புட னேவந்து எய்திடும் முத்தியே.

எய்தி வழிப்படில் எய்தா தனவில்லைஎய்தி வழிப்படில் இந்திரன் செல்வமும்எய்தி வழிப்படில் எண்சித்தி உண்டாகும்எய்தி வழிப்படில் எய்திடும் முத்தியே.

நண்ணும் பிறதார நீத்தார் அவித்தார்மண்ணிய நைவேத் தியமனு சந்தானநண்ணிய பஞ்சாங்க நண்ணுஞ் செபமென்னுமன்னு மனபவ னத்தொடு வைகுமே.

வேண்டார்கள் கன்மம் விமலனுக் காட்பட்டோர்வேண்டார்கள் கன்ம மதிலிச்சை யற்றபேர்வேண்டார்கள் கன்மம் மிகுசிவ யோகிகள்வேண்டார்கள் கன்மம் மிகுதியோ ராய்ந்தன்பே.

அறிவரு ஞானத் தெவரும் அறியார்பொறிவழி தேடிப் புலம்புகின் றார்கள்நெறிமனை யுள்ளே நிலைபெற நோக்கில்எறிமணி யுள்ளே இருக்கலும் ஆமே.

இருளும் வெளியும்போல் இரண்டாம் இதயம்அருளறி யாமையும் மன்னு மறிவுமருளிவை விட்டறி யாமை மயங்குமருளுஞ் சிதைத்தோ ரவர்களா மன்றே.

தானவ னாக அவனேதா னாயிடஆன இரண்டில் அறிவன் சிவமாகப்போனவ னன்பிது நாலாம் மரபுறத்தானவ னாகுமோ ராதித்த தேவரே.

ஓங்கார முந்திக்கீழ் உற்றிடும் எந்நாளும்நீங்கா வகராமும் நீள்கண்டத் தாயிடும்பாங்கார் நகாரம் பயில்நெற்றி யுற்றிடும்வீங்காகும் விந்துவும் நாதமே லாகுமே.

நமவது வாசன மான பசுவேசிவமது சித்திச் சிவமாம் பதியேநமவற வாதி நாடுவது அன்றாஞ்சிவமாகு மாமோனஞ் சேர்தல்மெய் வீடே.

தெளிவரு நாளிற் சிவஅமு தூறும்ஒளிவரு நாளில் ஓரெட்டில் உகளுங்ஒளிவரு அப்பதத் தோரிரண் டாகில்வெளிதரு நாதன் வெளியாய் இருந்தே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #1003

1 / 11

0:000:00
3. அருச்சனைபாடல் 1003

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com