தொடர்ந்து படிக்கread this section continuously
அம்புய நீலங் கழுநீ ரணிநெய்தல்வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம்தும்பை வகுளஞ் சுரபுன்னை மல்லிகைசெண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே.
உரைmeaning
தாமரை மலர், கருங்குவளை மலர், செழுங்கழுநீர் மலர், அழகாகக் கட்டிய நெய்தல் மலர், மணம் கமழும் பாக்கு மலர், மாதவி மலர், மந்தாரை மலர், தும்பை மலர், மகிழம்பூ, சுரபுன்னை மலர், மல்லிகை மலர், செண்பகம், பாதிரி, செவ்வந்தி ஆகிய பதினான்கு வகை மலர்களும் இறைவனுக்கு அர்ச்சனை செய்ய ஏற்ற மலர்கள் என்று இப்பாடல் கூறுகிறது.
The lotus flower, the blue water lily, the red kazhuneer flower, the neatly strung neithal flower, the fragrant areca flower, the madhavi flower, the mandarai flower, the thumbai flower, the magizham flower, the surapunnai flower, the jasmine flower, the shenbagam, the pathiri and the sevvanthi, these fourteen kinds of flowers are fitting to offer God in worship, this verse declares.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
தாமரை மலரும், கருங்குவளை மலரும், செழுங்கழுநீர் மலரும், அழகாகக் கட்டிய நெய்தல் மலரும்,
The lotus flower, the blue water lily, the red kazhuneer flower, and the neatly strung neithal flower,
- வரி 2Line 2
மணம் கமழும் பாக்கு மலரும், மாதவி மலரும், மந்தாரை மலரும்,
the fragrant areca flower, the madhavi flower and the mandarai flower,
- வரி 3Line 3
தும்பை மலரும், மகிழம்பூவும், சுரபுன்னை மலரும், மல்லிகை மலரும்,
the thumbai flower, the magizham flower, the surapunnai flower and the jasmine flower,
- வரி 4Line 4
செண்பகமும், பாதிரியும், செவ்வந்தியும் ஆகிய பதினான்கு வகை மலர்களும் இறைவனுக்கு அர்ச்சனை செய்ய ஏற்றவை.
the shenbagam, the pathiri and the sevvanthi, these fourteen kinds of flowers are fitting to offer God in worship.
திருமந்திரம் பாடல் #1003





