தொடர்ந்து படிக்கread this section continuously
நண்ணும் பிறதார நீத்தார் அவித்தார்மண்ணிய நைவேத் தியமனு சந்தானநண்ணிய பஞ்சாங்க நண்ணுஞ் செபமென்னுமன்னு மனபவ னத்தொடு வைகுமே.
உரைmeaning
பிறர் மனைவியை விரும்பாதவராகவும், ஐம்புலன்களையும் அடக்கியவராகவும், பாடல் #1003, #1004, #1005 இல் உள்ள முறைப்படி நாள்தோறும் வழிபடுபவராகவும், உடலின் ஐந்து அங்கங்களும் தரையில் படும்படி இறைவன் முன் விழுந்து வணங்குபவராகவும், குருவிடம் பெற்ற மந்திரத்தைச் செபிப்பவராகவும், உடலும் மனமும் மூச்சுக்காற்றோடு இணைந்திருக்கும்படி வழிபடுபவராகவும் இருப்பவரே இறைவனை அர்ச்சிப்பவர் ஆவார் என்று இப்பாடல் கூறுகிறது.
One who does not desire another's wife, who has mastered the five senses, who worships daily in the manner given in verses 1003, 1004 and 1005, who falls before God so that all five limbs of the body touch the ground, who recites the mantra received from the guru, and who worships with body and mind joined to the breath, such a one alone is a true worshipper of God, this verse declares.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பிறர் மனைவியை விரும்பாதவராகவும், ஐம்புலன்களையும் அடக்கியவராகவும்,
One who does not desire another's wife, and who has mastered the five senses,
- வரி 2Line 2
பாடல் #1003, #1004, #1005 இல் உள்ள முறைப்படி நாள்தோறும் வழிபடுபவராகவும்,
who worships daily in the manner given in verses 1003, 1004 and 1005,
- வரி 3Line 3
உடலின் ஐந்து அங்கங்களும் தரையில் படும்படி இறைவன் முன் விழுந்து வணங்குபவராகவும், குருவிடம் பெற்ற மந்திரத்தைச் செபிப்பவராகவும்,
who falls before God so that all five limbs of the body touch the ground, and who recites the mantra received from the guru,
- வரி 4Line 4
உடலும் மனமும் மூச்சுக்காற்றோடு இணைந்திருக்கும்படி வழிபடுபவராகவும் இருப்பவரே இறைவனை அர்ச்சிப்பவர் ஆவார்.
and who worships with body and mind joined to the breath, such a one alone is a true worshipper of God.




