திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1013

தொடர்ந்து படிக்கread this section continuously

நமவது வாசன மான பசுவேசிவமது சித்திச் சிவமாம் பதியேநமவற வாதி நாடுவது அன்றாஞ்சிவமாகு மாமோனஞ் சேர்தல்மெய் வீடே.

உரை

உயிர்களின் ஆன்மா தன் ஆசைகளால் 'நான்' எனும் அகங்கார மயக்கத்துடன் பல பிறவிகள் எடுக்கின்றது. ஆன்மாவின் தலைவனாகிய இறைவன் சிவமாக உயிர்களுக்குள் தானாகவே மறைந்திருக்கின்றான். சாதகர் பாடல் #1003, #1004, #1005 இல் உள்ளபடி அர்ச்சனை செய்து, 'நான்' எனும் அகங்காரம் இல்லாமல் இறைவனை நாடும்போது, அன்றே எண்ணங்களே அற்ற நிலையைப் பெற்று இறைவனோடு சேர்வதே உண்மையான வீடுபேறு என்று இப்பாடல் கூறுகிறது.

வரி வாரியாக

  • வரி 1

    உயிர்களின் ஆன்மா தன் ஆசைகளால் 'நான்' எனும் அகங்கார மயக்கத்துடன் பல பிறவிகள் எடுக்கின்றது.

  • வரி 2

    ஆன்மாவின் தலைவனாகிய இறைவன் சிவமாக உயிர்களுக்குள் தானாகவே மறைந்திருக்கின்றான்.

  • வரி 3

    சாதகர் பாடல் #1003, #1004, #1005 இல் உள்ளபடி அர்ச்சனை செய்து, 'நான்' எனும் அகங்காரம் இல்லாமல் இறைவனை நாடும்போது,

  • வரி 4

    அன்றே எண்ணங்களே அற்ற நிலையைப் பெற்று இறைவனோடு சேர்வதே உண்மையான வீடுபேறு.

திருமந்திரம் பாடல் #1013

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout