தொடர்ந்து படிக்கread this section continuously
தெளிவரு நாளிற் சிவஅமு தூறும்ஒளிவரு நாளில் ஓரெட்டில் உகளுங்ஒளிவரு அப்பதத் தோரிரண் டாகில்வெளிதரு நாதன் வெளியாய் இருந்தே.
உரைmeaning
பாடல் #1013 இல் உள்ளபடி உண்மையான வீடுபேற்றை அடைந்த சாதகரின் உடலுக்குள் சிவ அமுது ஊறி தலை உச்சிக்குச் சென்றவுடன், பேரொளி தோன்றி உடலைச் சூழ்ந்திருக்கும் எட்டு தத்துவங்களும் விலகிவிடும். அப்படித் தோன்றிய பேரொளியை ஒலியாகவும் ஒளியாகவும் தரிசித்தால், பரவெளியில் வீற்றிருக்கும் இறைவன் தமக்குள்ளிருந்தே வெளிப்படுவான் என்று இப்பாடல் கூறுகிறது.
As in verse 1013, once the true liberation is attained, within the seeker's body the Shiva nectar seeps and rises to the crown of the head, and a great light appears, and the eight tattvas that surround the body fall away. If one beholds that great light as both sound and light, God, who abides in the vast expanse, reveals himself from within, this verse declares.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1013 இல் உள்ளபடி உண்மையான வீடுபேற்றை அடைந்த சாதகரின் உடலுக்குள் சிவ அமுது ஊறி தலை உச்சிக்குச் சென்றவுடன்,
As in verse 1013, once the true liberation is attained, within the seeker's body the Shiva nectar seeps and rises to the crown of the head,
- வரி 2Line 2
பேரொளி தோன்றி உடலைச் சூழ்ந்திருக்கும் எட்டு தத்துவங்களும் விலகிவிடும்.
a great light appears, and the eight tattvas that surround the body fall away.
- வரி 3Line 3
அப்படித் தோன்றிய பேரொளியை ஒலியாகவும் ஒளியாகவும் தரிசித்தால்,
If one beholds that great light so appearing as both sound and light,
- வரி 4Line 4
பரவெளியில் வீற்றிருக்கும் இறைவன் தமக்குள்ளிருந்தே வெளிப்படுவான்.
God, who abides in the vast expanse, reveals himself from within.
திருமந்திரம் பாடல் #1014





