தொடர்ந்து படிக்கread this section continuously
நவகுண்ட மானவை நானுரை செய்யின்நவகுண்டத் துள்ளெழு நற்றீபந் தானும்நவகுண்டத் துள்ளெழு நன்மைகள் எல்லாம்நவகுண்ட மானவை நானுரைப் பேனே.
உரைmeaning
மந்திரங்களில் சித்தி பெற்றவர்கள் தமது எண்ணங்கள் நிறைவேற ஒன்பது வகைக் குண்டங்களை (ஹோமக் குழிகளை) அமைத்து அவற்றில் ஹோமம் வளர்க்கும்போது, அதனுள்ளிருந்து இறைவனின் ஒளி வடிவமான அக்கினிப் பிழம்பு மேலெழும்பும். இந்த ஹோமக் குண்டங்கள் மூலம் இறைவனை வழிபடுவதால் எல்லா நன்மைகளையும் அடையலாம். இந்த ஒன்பது வகைக் குண்டங்களையும் அவற்றின் முறைகளையும் யாம் இங்கே கூறுவோம் என்று இப்பாடல் கூறுகிறது.
When those who have attained siddhi in mantras build nine kinds of pits to fulfil their wishes and grow the sacred fire within them, the flame that is the very form of God's light rises up from within. By worshipping God through these fire pits, every good thing can be attained. We shall now declare these nine kinds of pits and their methods, this verse declares.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
மந்திரங்களில் சித்தி பெற்றவர்கள் தமது எண்ணங்கள் நிறைவேற ஒன்பது வகைக் குண்டங்களை அமைத்து அவற்றில் ஹோமம் வளர்க்கும்போது,
When those who have attained siddhi in mantras build nine kinds of pits to fulfil their wishes and grow the sacred fire within them,
- வரி 2Line 2
அதனுள்ளிருந்து இறைவனின் ஒளி வடிவமான அக்கினிப் பிழம்பு மேலெழும்பும்.
the flame that is the very form of God's light rises up from within.
- வரி 3Line 3
இந்த ஹோமக் குண்டங்கள் மூலம் இறைவனை வழிபடுவதால் எல்லா நன்மைகளையும் அடையலாம்.
By worshipping God through these fire pits, every good thing can be attained.
- வரி 4Line 4
இந்த ஒன்பது வகைக் குண்டங்களையும் அவற்றின் முறைகளையும் யாம் இங்கே கூறுவோம்.
We shall now declare these nine kinds of pits and their methods.
திருமந்திரம் பாடல் #1015





