திருமூலர் அருளிய திருமந்திரம்
4. நவ குண்டம்

நான்காம் தந்திரம் பாடல் 1015–1044 (30 பாடல்கள்)

நவகுண்ட மானவை நானுரை செய்யின்நவகுண்டத் துள்ளெழு நற்றீபந் தானும்நவகுண்டத் துள்ளெழு நன்மைகள் எல்லாம்நவகுண்ட மானவை நானுரைப் பேனே.

உரைத்திடுங் குண்டத்தி னுள்ளேமுக் காலும்நகைத்தெழு நாற்கோண நன்மைகள் ஐந்தும்பகைத்திடு முப்புரம் பாரங்கி யோடேமிகைத்திடு குண்டங்கள் மேலறி யோமே.

மேலெறிந்து உள்ளே வெளிசெய்த அப்பொருள்கால்அறிந்து உள்ளே கருத்துற்ற செஞ்சுடர்பார்அறிந்து அண்டம் சிறகற நின்றதுநான்அறிந்து உள்ளே நாடிக்கொண் டேனே.

கொண்டஇக் குண்டத்தின் உள்ளெழு சோதியால்அண்டங்கள் ஈரேழு மாக்கி அழிக்கலாம்பண்டையுள் வேதம் பரந்த பரப்பெலாம்இன்றுசொல் நூலாய் எடுத்துஉரைத் தேனே.

எடுத்தவிக் குண்டத் திடம்பதி னாறிற்பதித்த கலைகளும் பாலித்து நிற்குங்கதித்தனல் உள்ளெழக் கண்டுகொள் வார்க்கேகொதித்தெழும் வல்வினை கூடகி லாவே.

கூடமுக் கூடத்தி னுள்ளெழு குண்டத்துள்ஆடிய ஐந்தும் அகம்புற மாய்நிற்கும்பாடிய பன்னீ ரிராசியும் அங்கெழநாடிக்கொள் வார்கட்கு நற்சுடர் தானே.

நற்சுட ராகுஞ் சிரமுக வட்டமாங்கைச்சுட ராகுங் கருத்துற்ற கைகளிற்பைச்சுடர் மேனி பதைப்புற் றிலிங்கமும்நற்சுட ராயெழு நல்லதென் றாளே.

நல்லதென் றாளே நமக்குற்ற நாயகஞ்சொல்லதென் றாளே சுடர்முடி பாதமாமெல்லநின் றாளை வினவகில் லாதவர்கல்லதன் றாளையுங் கற்குறுமின் னாளே.

மின்னா இளம்பிறை மேவிய குண்டத்துச்சொன்னால் இரண்டுஞ் சுடர்நாகந் திக்கெங்கும்பன்னாலு நாகம் பரந்த பரஞ்சுடர்என்ஆகத் துள்ளே இடங்கொண்ட வாறே.

இடங்கொண்ட பாதம் எழிற்சுட ரேகநடங்கொண்ட பாதங்கள் நன்னீ ரதற்குச்சகங்கொண்ட கையிரண் டாறுந் தழைப்பமுகங்கொண்ட செஞ்சுடர் முக்கண னார்க்கே.

முக்கணன் றானே முழுச்சுட ராயவன்அக்கணன் றானே அகிலமும் உண்டவன்திக்கண னாகி திசையெட்டுங் கண்டவன்எக்கணன் றானுக்கும் எந்தை பிரானே.

எந்தை பிரானுக்கு இருமூன்று வட்டமாய்த்தந்தைதன் முன்னே சண்முகம் தோன்றலால்கந்தன் சுவாமி கலந்தங்கு இருந்தலான்மைந்தன் இவனென்று மாட்டிக்கொள் ளீரே.

மாட்டிய குண்டத்தின் உள்ளெழு வேதத்துள்ஆட்டிய காலொன்றும் இரண்டும் அலர்ந்திடும்வாட்டிய கையிரண்டு ஒன்று பதைத்தெழுநாட்டும் சுரரிவர் நல்லொளி தானே.

நல்லொளி யாக நடந்த துலகெங்குங்கல்லொளி யாகக் கலந்துள் ளிருந்திடுஞ்சொல்லொளி யாகத் தொடர்ந்த வுயிர்க்கெலாம்கல்லொளி கண்ணுளு மாகிநின் றானே.

நின்றஇக் குண்ட நிலையாறு கோணமாய்ப்பண்டையில் வட்டம் பதைத்தெழு மாறாறுங்கொண்டஇத் தத்துவ முள்ளே கலந்தெழவிண்ணுளு மென்ன எடுக்கலு மாமே.

எடுக்கின்ற பாதங்கண் மூன்றெழு கையுங்கடுத்த முகமிரண் டாறுகண் ணாகப்படித்தெண்ணு நாவேழு கொம்பொரு நாலும்அடுத்தெழு கண்ணான தந்தமி லாற்கே.

அந்தமில் லானுக் ககலிடந் தானில்லைஅந்தமில் லானை அளப்பவர் தாமில்லைஅந்தமில் லானுக் கடுத்தசொற் றானில்லைஅந்தமில் லானை அறிந்துகொள் பத்தே.

பத்திட்டங் கெட்டிட்டு ஆறிட்டு நாலிட்டுமட்டிட்ட குண்டம் மலர்ந்தெழு தாமரைகட்டிட்டு நின்று கலந்தமெய் யாகமும்பட்டிட்டு நின்றது பார்ப்பதி பாலே.

பார்ப்பதி பாகன் பரந்தகை நாலைஞ்சுகாற்பதி பத்து முகம்பத்துக் கண்களும்பூப்பதி பாதம் இரண்டு சுடர்முடிநாற்பது சோத்திரம் நல்லிரு பத்தஞ்சே.

அஞ்சிட்ட கோலம் அளப்பன ஐஐந்தம்மஞ்சிட்ட குண்டம் மலர்ந்தங்கு இருத்தலால்பஞ்சிட்ட சோதி பரந்த பரஞ்சுடர்கொஞ்சிட்ட வன்னியைக் கூடுதல் முத்தியே.

முத்திநற் சோதி முழுச்சுட ராயவன்கற்றற்று நின்றார் கருத்துள் இருந்திடும்பற்றற நாடிப் பரந்தொளி யூடுபோய்ச்செற்றற்று இருந்தவர் சேர்ந்திருந் தாரே.

சேர்ந்த கலையஞ்சுஞ் சேருமின் குண்டமும்ஆர்ந்த திசைகளு மங்கே யமர்ந்திடும்பாய்ந்தஐம் பூதமும் பார்க்கின்ற வன்னியைக்காய்ந்தவ ரென்றுங் கலந்தவர் தாமே.

மெய்கண்ட மாம்விரி நீருல கேழையும்உய்கண்டஞ் செய்த வொருவனைச் சேருமின்செய்கண்ட ஞானந் திருந்திய தேவர்கள்பொய்கண்ட மில்லாப் பொருள்கலந் தாரே.

கலந்திரு பாதம் இருகர மாகும்மலர்ந்திரு குண்ட மகாரத்தோர் மூக்குமலர்ந்தெழு செம்முக மற்றைக்கண் நெற்றிஉணர்ந்திரு குஞ்சியங் குத்தம னார்க்கே.

உத்தமன் சோதி யுளனொரு பாலனாய்மத்திம னாகி மலர்ந்தங் கிருந்திடும்பச்சிம திக்கும் பரந்து குழிந்தனசத்திமா னாகத் தழைத்த கொடியே.

கொடியாறு சென்று குலாவிய குண்டம்அடியிரு கோணமாய் அந்தமும் ஒக்கும்படிஏழ் உலகும் பரந்த சுடரைமடியாது கண்டவர் மாதன மாமே.

மாதன மாக வளர்கின்ற வன்னியைச்சாதன மாகச் சமைந்த குருவென்றுபோதன மாகப் பொருந்த உலகாளும்பாதன மாகப் பரிந்தது பார்த்தே.

பார்த்திடம் எங்கும் பரந்தெழு சோதியைஆத்தம தாகவே யாய்ந்தறி வாரில்லைகாத்துட லுள்ளே கருதி யிருந்தவர்மூத்துடல் கோடி யுகங்கண்ட வாறே.

உகங்கண்ட ஒன்பது குண்டமும் ஒக்கஅகங்கண்ட யோகியுள் நாடி எழுப்பும்பகங்கண்டு கொண்டவிப் பாய்கரு வொப்பச்சகங்கண்டு கொண்டது சாதன மாமே.

சாதன நாலு தழல்மூன்று வில்வயம்வேதனை வட்டம் விளையாறு பூநிலைபோதனை போதஞ்சு பொற்கயல் வாரணநாதனை நாடு நவகோடி தானே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #1015

1 / 30

0:000:00
4. நவ குண்டம்பாடல் 1015

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com