தொடர்ந்து படிக்கread this section continuously
கொடியாறு சென்று குலாவிய குண்டம்அடியிரு கோணமாய் அந்தமும் ஒக்கும்படிஏழ் உலகும் பரந்த சுடரைமடியாது கண்டவர் மாதன மாமே.
உரைmeaning
பாடல் 1039 இல் உள்ளபடி, ஆறு சக்திமயங்களிலும் உச்ச நிலையில் இருக்கும் சக்தி, உடலாகிய நவகுண்டத்தோடு பேரின்பத்தில் இருக்கும். இந்தச் சக்தி மூலாதாரத்திலிருந்து சுடரொளியாக இரண்டு கோணங்களாகச் சென்று, ஏழு உலகங்களுக்கும் பரவி, அதையும் தாண்டிய உச்சியாக இருக்கும். மூலாதாரத்தில் இருக்கும் இந்தச் சுடரொளியைத் தொடர்ந்து ஏற்றிக்கொண்டே இருப்பவர்கள், இறைவனின் மாபெரும் அருளைப் பெற்றவர்கள் ஆவார்கள். இறைவனை உத்தம ஜோதியாக உணர்ந்த சாதகரின் ஆறு சக்கரங்களிலுள்ள சக்தி உச்ச நிலையை அடைந்து, மூலாதாரத்திலிருந்து இரண்டு கோணங்களாகச் சென்று ஏழு உலகங்களுக்கும் பரவும்; இந்த நிலையைத் தொடர்ந்து செய்யும் சாதகர் இறைவனின் மாபெரும் அருளைப் பெற்றவர் ஆவார் என இப்பாடலின் கருத்து கூறுகிறது.
As in verse 1039, the power that is at its highest state in all six forms of power remains in supreme bliss with the body that is the nine pits. This power goes from the muladhara as a flame in two angles, spreads to all seven worlds, and stands as the summit that surpasses even them. Those who continue to keep kindling this flame that is in the muladhara become ones who have received the Lord's great grace. This verse's gist is that the power in the six chakras of the seeker who has realized the Lord as the supreme light reaches its highest state and goes from the muladhara in two angles, like a V, spreading to all seven worlds; the seeker who continues in this state becomes one who has received the Lord's great grace.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் 1039 இல் உள்ளபடி, ஆறு சக்திமயங்களிலும் உச்ச நிலையில் இருக்கும் சக்தி, உடலாகிய நவகுண்டத்தோடு பேரின்பத்தில் இருக்கும்.
As in verse 1039, the power that is at its highest state in all six forms of power remains in supreme bliss with the body that is the nine pits.
- வரி 2Line 2
இந்தச் சக்தி மூலாதாரத்திலிருந்து சுடரொளியாக இரண்டு கோணங்களாகச் சென்று, ஏழு உலகங்களுக்கும் பரவி, அதையும் தாண்டிய உச்சியாக இருக்கும்.
This power goes from the muladhara as a flame in two angles, spreads to all seven worlds, and stands as the summit that surpasses even them.
- வரி 3Line 3
மூலாதாரத்தில் இருக்கும் இந்தச் சுடரொளியைத் தொடர்ந்து ஏற்றிக்கொண்டே இருப்பவர்கள், இறைவனின் மாபெரும் அருளைப் பெற்றவர்கள் ஆவார்கள்.
Those who continue to keep kindling this flame that is in the muladhara become ones who have received the Lord's great grace.
- வரி 4Line 4
இறைவனை உத்தம ஜோதியாக உணர்ந்த சாதகரின் ஆறு சக்கரங்களிலுள்ள சக்தி உச்ச நிலையை அடைந்து, மூலாதாரத்திலிருந்து இரண்டு கோணங்களாகச் சென்று ஏழு உலகங்களுக்கும் பரவும்; இந்த நிலையைத் தொடர்ந்து செய்யும் சாதகர் இறைவனின் மாபெரும் அருளைப் பெற்றவர் ஆவார் என இப்பாடலின் கருத்து கூறுகிறது.
This verse's gist is that the power in the six chakras of the seeker who has realized the Lord as the supreme light reaches its highest state and goes from the muladhara in two angles, like a V, spreading to all seven worlds; the seeker who continues in this state becomes one who has received the Lord's great grace.
திருமந்திரம் பாடல் #1040





