திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1041

தொடர்ந்து படிக்கread this section continuously

மாதன மாக வளர்கின்ற வன்னியைச்சாதன மாகச் சமைந்த குருவென்றுபோதன மாகப் பொருந்த உலகாளும்பாதன மாகப் பரிந்தது பார்த்தே.

உரை

பாடல் 1040 இல் உள்ளபடி, சாதகர் பெற்ற இறைவனின் மாபெரும் அருள், தமக்குள் இருக்கும் மூலாக்கினியைப் பஞ்சபூதங்களைக் கருவியாகக் கொண்டு வளர்த்து, முழுமை அடைந்து, குருவாக இருந்து தமக்குள்ளேயே வழிகாட்டுகிறது. அப்படிக் குரு காட்டிய வழிப்படி, நவகுண்டமாகிய உடலானது ஏழு உலகங்களுக்கும் அதனதன் தன்மைக்கு ஏற்றார்போல மாறிச் செல்கிறது. அங்கே குரு கூறிய செயலைச் செய்யும்போது, அந்த உலகம் அவர் முன் வணங்கி நிற்பதைக் காணலாம். பஞ்சபூதங்கள் சாதகரின் உடலுக்குள் இருக்கும் மூலாக்கினியை வளர்த்துக்கொண்டே இருக்கும்; அது முழுமை அடையும்போது குருவாக நின்று ஏழு உலகங்களுக்கும் செல்ல வழிகாட்டும், அதன்படி சாதகர் செய்யும் செயலுக்கு அந்த உலகங்கள் அவரை வணங்கி நிற்கும் என இப்பாடலின் கருத்து கூறுகிறது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் 1040 இல் உள்ளபடி, சாதகர் பெற்ற இறைவனின் மாபெரும் அருள், தமக்குள் இருக்கும் மூலாக்கினியைப் பஞ்சபூதங்களைக் கருவியாகக் கொண்டு வளர்த்து, முழுமை அடைந்து, குருவாக இருந்து தமக்குள்ளேயே வழிகாட்டுகிறது.

  • வரி 2

    அப்படிக் குரு காட்டிய வழிப்படி, நவகுண்டமாகிய உடலானது ஏழு உலகங்களுக்கும் அதனதன் தன்மைக்கு ஏற்றார்போல மாறிச் செல்கிறது.

  • வரி 3

    அங்கே குரு கூறிய செயலைச் செய்யும்போது, அந்த உலகம் அவர் முன் வணங்கி நிற்பதைக் காணலாம்.

  • வரி 4

    பஞ்சபூதங்கள் சாதகரின் உடலுக்குள் இருக்கும் மூலாக்கினியை வளர்த்துக்கொண்டே இருக்கும்; அது முழுமை அடையும்போது குருவாக நின்று ஏழு உலகங்களுக்கும் செல்ல வழிகாட்டும், அதன்படி சாதகர் செய்யும் செயலுக்கு அந்த உலகங்கள் அவரை வணங்கி நிற்கும் என இப்பாடலின் கருத்து கூறுகிறது.

திருமந்திரம் பாடல் #1041

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout