தொடர்ந்து படிக்கread this section continuously
பார்த்திடம் எங்கும் பரந்தெழு சோதியைஆத்தம தாகவே யாய்ந்தறி வாரில்லைகாத்துட லுள்ளே கருதி யிருந்தவர்மூத்துடல் கோடி யுகங்கண்ட வாறே.
உரைmeaning
பாடல் 1041 இல் உள்ளபடி, சாதகர் பார்க்கின்ற உலகங்கள் அனைத்திலும் பரவி எழுகின்ற ஜோதியான இறைவனின் உண்மையான தன்மையை ஆராய்ந்து அறிந்துகொள்பவர் யாருமில்லை. அந்த ஜோதியின் உண்மையான தன்மையைத் தமக்குள் உணரும்வரை காத்திருக்கும் சாதகர்கள், அதை முழுவதும் அறிந்து உணர்ந்தபிறகு, அவர்களின் நவகுண்டமாகிய உடலானது மேன்மை நிலையை அடைந்து, என்றும் அழியாமல் கோடி யுகங்கள் நிலைத்திருக்கும் என இப்பாடல் கூறுகிறது.
As in verse 1041, there is no one who investigates and comes to know the true nature of the Lord who is the light rising and spreading through all the worlds a seeker beholds. Seekers wait until they realize within themselves the true nature of that light, and once they have fully known and realized it, this verse states that their body, the nine pits, attains an exalted state and stands unperishing for crore ages.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் 1041 இல் உள்ளபடி, சாதகர் பார்க்கின்ற உலகங்கள் அனைத்திலும் பரவி எழுகின்ற ஜோதியான இறைவனின் உண்மையான தன்மையை ஆராய்ந்து அறிந்துகொள்பவர் யாருமில்லை.
As in verse 1041, there is no one who investigates and comes to know the true nature of the Lord who is the light rising and spreading through all the worlds a seeker beholds.
- வரி 2Line 2
அந்த ஜோதியின் உண்மையான தன்மையைத் தமக்குள் உணரும்வரை காத்திருக்கும் சாதகர்கள்,
Seekers wait until they realize within themselves the true nature of that light,
- வரி 3Line 3
அதை முழுவதும் அறிந்து உணர்ந்தபிறகு,
and once they have fully known and realized it,
- வரி 4Line 4
அவர்களின் நவகுண்டமாகிய உடலானது மேன்மை நிலையை அடைந்து, என்றும் அழியாமல் கோடி யுகங்கள் நிலைத்திருக்கும் என இப்பாடல் கூறுகிறது.
this verse states that their body, the nine pits, attains an exalted state and stands unperishing for crore ages.
திருமந்திரம் பாடல் #1042





