தொடர்ந்து படிக்கread this section continuously
உத்தமன் சோதி யுளனொரு பாலனாய்மத்திம னாகி மலர்ந்தங் கிருந்திடும்பச்சிம திக்கும் பரந்து குழிந்தனசத்திமா னாகத் தழைத்த கொடியே.
உரைmeaning
பாடல் 1038 இல் உள்ளபடி, உத்தமாக உணரப்பட்ட இறைவனோடு சேர்ந்த சாதகர், ஆரம்ப நிலையில் பாலகனாக இருக்கிறார். அதன்பிறகு, பாடல் 1036 இல் உள்ளபடி ஐந்து பூதங்களும் அவரது சாதகத்தைத் தொடர்ந்து செய்யும்போது, அந்தப் பாலகன் ஆறு சக்கரங்களுக்கும் சென்று இளைஞனாக மலர்கிறார். அதன்பிறகு, ஆறு சக்கரங்களிலிருந்தும் வரும் சக்தி அனைத்துத் திசைகளுக்கும் பரந்து விரிந்து நிரம்பியிருக்கும். அதன்பிறகு, ஆறு சக்திமயங்களிலும் உள்ள சக்தி தமது உச்ச நிலையை அடைந்து விளங்குகிறது.
As in verse 1038, the seeker joined with the Lord as rightly realized is, at the beginning, a child. After that, as in verse 1036, when the five elements continue their work on him, that child goes to all six chakras and blossoms into a youth. After that, the power that comes from all six chakras spreads and fills every direction. After that, the power present in all six forms of power reaches its highest state and shines forth.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் 1038 இல் உள்ளபடி, உத்தமாக உணரப்பட்ட இறைவனோடு சேர்ந்த சாதகர், ஆரம்ப நிலையில் பாலகனாக இருக்கிறார்.
As in verse 1038, the seeker joined with the Lord as rightly realized is, at the beginning, a child.
- வரி 2Line 2
அதன்பிறகு, பாடல் 1036 இல் உள்ளபடி ஐந்து பூதங்களும் அவரது சாதகத்தைத் தொடர்ந்து செய்யும்போது, அந்தப் பாலகன் ஆறு சக்கரங்களுக்கும் சென்று இளைஞனாக மலர்கிறார்.
After that, as in verse 1036, when the five elements continue their work on him, that child goes to all six chakras and blossoms into a youth.
- வரி 3Line 3
அதன்பிறகு, ஆறு சக்கரங்களிலிருந்தும் வரும் சக்தி அனைத்துத் திசைகளுக்கும் பரந்து விரிந்து நிரம்பியிருக்கும்.
After that, the power that comes from all six chakras spreads and fills every direction.
- வரி 4Line 4
அதன்பிறகு, ஆறு சக்திமயங்களிலும் உள்ள சக்தி தமது உச்ச நிலையை அடைந்து விளங்குகிறது.
After that, the power present in all six forms of power reaches its highest state and shines forth.
திருமந்திரம் பாடல் #1039





