திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1037

தொடர்ந்து படிக்கread this section continuously

மெய்கண்ட மாம்விரி நீருல கேழையும்உய்கண்டஞ் செய்த வொருவனைச் சேருமின்செய்கண்ட ஞானந் திருந்திய தேவர்கள்பொய்கண்ட மில்லாப் பொருள்கலந் தாரே.

உரை

இறைவனால் முறையாக வகுக்கப்பட்டுப் படைக்கப்பட்ட, பரந்து விரிந்த கடல்களைக் கொண்ட ஏழு உலகங்கள் இருக்கின்றன. இந்த ஏழு உலகங்களிலும் உள்ள உயிர்கள் அனைத்தும் முக்திபெற வேண்டும் என்ற கருணையினால், அவை முக்திபெறும் வழிமுறைகளையும் இறைவன் முறையாக வகுத்திருக்கிறான். உயிர்கள் சென்று அவனை அடைந்தால், முறையாக வகுக்கப்பட்ட நவகுண்ட யாகத்தின் மூலம் கிடைக்கும் ஞானங்கள் அனைத்தையும் அறிந்து, தேவர்களாக உயர்ந்த நிலையை அடைவார்கள். அவ்வாறு உயர்ந்த தேவர்கள், பொய் முறைகளால் வகுக்கப்பட்ட எந்தவித மாயையும் இல்லாத உண்மையான மெய்ப்பொருளான சதாசிவமூர்த்தியோடு கலந்திருப்பார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவனால் முறையாக வகுக்கப்பட்டுப் படைக்கப்பட்ட, பரந்து விரிந்த கடல்களைக் கொண்ட ஏழு உலகங்கள் இருக்கின்றன.

  • வரி 2

    இந்த ஏழு உலகங்களிலும் உள்ள உயிர்கள் அனைத்தும் முக்திபெற வேண்டும் என்ற கருணையினால், அவை முக்திபெறும் வழிமுறைகளையும் இறைவன் முறையாக வகுத்திருக்கிறான்.

  • வரி 3

    உயிர்கள் சென்று அவனை அடைந்தால், முறையாக வகுக்கப்பட்ட நவகுண்ட யாகத்தின் மூலம் கிடைக்கும் ஞானங்கள் அனைத்தையும் அறிந்து, தேவர்களாக உயர்ந்த நிலையை அடைவார்கள்.

  • வரி 4

    அவ்வாறு உயர்ந்த தேவர்கள், பொய் முறைகளால் வகுக்கப்பட்ட எந்தவித மாயையும் இல்லாத உண்மையான மெய்ப்பொருளான சதாசிவமூர்த்தியோடு கலந்திருப்பார்கள்.

திருமந்திரம் பாடல் #1037

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout