திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1036

தொடர்ந்து படிக்கread this section continuously

சேர்ந்த கலையஞ்சுஞ் சேருமின் குண்டமும்ஆர்ந்த திசைகளு மங்கே யமர்ந்திடும்பாய்ந்தஐம் பூதமும் பார்க்கின்ற வன்னியைக்காய்ந்தவ ரென்றுங் கலந்தவர் தாமே.

உரை

பாடல் 1035 இல் உள்ளபடி, இறைவனோடு சேர்ந்திருக்கும் சாதகர், இறைவனுடைய ஐந்துவகைத் தொழில்களையும் நவகுண்டமாகிய இந்த உடலுக்குள்ளிருந்தே இயக்கலாம். அதன்பின் அனைத்துத் திசைகளையும் முழுமையாகச் சாதகர் அறிந்துகொள்வார். ஐம்பூதங்களும் தங்களின் உச்சத் தன்மையில் சாதகரின் உடலுக்குள்ளிருந்து தாமாகவே மூலாக்கினியை ஏற்றிக்கொண்டே இருக்கும். இந்த நிலையை அடைந்த சாதகர் இறைவனோடு என்றும் கலந்திருப்பார்; நவகுண்ட யாகம் செய்யும் சாதகர் அனைத்துத் திசைகளிலும் எங்கும் செல்லும் தன்மையையும் பெறுவார்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் 1035 இல் உள்ளபடி, இறைவனோடு சேர்ந்திருக்கும் சாதகர், இறைவனுடைய ஐந்துவகைத் தொழில்களையும் நவகுண்டமாகிய இந்த உடலுக்குள்ளிருந்தே இயக்கலாம்.

  • வரி 2

    அதன்பின் அனைத்துத் திசைகளையும் முழுமையாகச் சாதகர் அறிந்துகொள்வார். ஐம்பூதங்களும் தங்களின் உச்சத் தன்மையில் சாதகரின் உடலுக்குள்ளிருந்து தாமாகவே மூலாக்கினியை ஏற்றிக்கொண்டே இருக்கும்.

  • வரி 3

    இந்த நிலையை அடைந்த சாதகர் இறைவனோடு என்றும் கலந்திருப்பார்.

  • வரி 4

    நவகுண்ட யாகம் செய்யும் சாதகர் அனைத்துத் திசைகளிலும் எங்கும் செல்லும் தன்மையையும் பெறுவார்.

திருமந்திரம் பாடல் #1036

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout