தொடர்ந்து படிக்கread this section continuously
முத்திநற் சோதி முழுச்சுட ராயவன்கற்றற்று நின்றார் கருத்துள் இருந்திடும்பற்றற நாடிப் பரந்தொளி யூடுபோய்ச்செற்றற்று இருந்தவர் சேர்ந்திருந் தாரே.
உரைmeaning
பாடல் 1034 இல் உள்ளபடி, சகஸ்ரதள ஜோதியோடு கலந்தபின், அங்கே முழுமையான நல்ல சுடரொளியாக இருக்கும் பரம்பொருள் ஆட்கொள்கிறது. உலக ஞானங்கள் அனைத்தையும் கற்று அறிந்திருந்தாலும், அதைவிட மேலான இந்த இறை ஞானத்தை உணர்ந்தவர்களின் எண்ணத்திற்குள்ளேயே அவன் இருப்பான். அந்த எண்ணங்களையும் விட்டு விலகி, எங்கும் பரவியிருக்கும் இறைவனின் பேரொளியை விரும்பிச் சென்று அடைந்து, அங்கே இறைவனோடு பேரின்பத்தில் சேர்ந்திருப்பார்கள். நவகுண்ட யாகத்தை முறைப்படி செய்த சாதகர்கள், தமது மூலாதாரத்திலுள்ள அக்னியை எழுப்பிச் சகஸ்ரதளத்தில் இருக்கும் இறைசக்தியோடு சேர்த்துவிட்டால், இறையருளால் எண்ணங்கள் அற்ற நிலையை அடைந்து இறைவனோடு ஒன்றாகச் சேர்ந்திருப்பார்கள் என இப்பாடலின் கருத்து கூறுகிறது.
As in verse 1034, after mingling with the light at the sahasradalam, the Supreme, who is there as a complete and good radiance, takes possession there. Even one who has learned and known all worldly knowledge, he will dwell within the thought of those who have realized this divine knowledge that is higher still. Departing even from those thoughts, and desiring and reaching the Lord's boundless light spread everywhere, they will remain there joined with the Lord in supreme bliss. This verse's gist is that seekers who perform the nine-pit yagna in the proper manner, raising the fire in their muladhara and joining it with the divine power at the sahasradalam, will, by divine grace, attain a state free of all thought and remain joined as one with the Lord.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் 1034 இல் உள்ளபடி, சகஸ்ரதள ஜோதியோடு கலந்தபின், அங்கே முழுமையான நல்ல சுடரொளியாக இருக்கும் பரம்பொருள் ஆட்கொள்கிறது.
As in verse 1034, after mingling with the light at the sahasradalam, the Supreme, who is there as a complete and good radiance, takes possession there.
- வரி 2Line 2
உலக ஞானங்கள் அனைத்தையும் கற்று அறிந்திருந்தாலும், அதைவிட மேலான இந்த இறை ஞானத்தை உணர்ந்தவர்களின் எண்ணத்திற்குள்ளேயே அவன் இருப்பான்.
Even one who has learned and known all worldly knowledge, he will dwell within the thought of those who have realized this divine knowledge that is higher still.
- வரி 3Line 3
அந்த எண்ணங்களையும் விட்டு விலகி, எங்கும் பரவியிருக்கும் இறைவனின் பேரொளியை விரும்பிச் சென்று அடைந்து, அங்கே இறைவனோடு பேரின்பத்தில் சேர்ந்திருப்பார்கள்.
Departing even from those thoughts, and desiring and reaching the Lord's boundless light spread everywhere, they will remain there joined with the Lord in supreme bliss.
- வரி 4Line 4
நவகுண்ட யாகத்தை முறைப்படி செய்த சாதகர்கள், தமது மூலாதாரத்திலுள்ள அக்னியை எழுப்பிச் சகஸ்ரதளத்தில் இருக்கும் இறைசக்தியோடு சேர்த்துவிட்டால், இறையருளால் எண்ணங்கள் அற்ற நிலையை அடைந்து இறைவனோடு ஒன்றாகச் சேர்ந்திருப்பார்கள் என இப்பாடலின் கருத்து கூறுகிறது.
This verse's gist is that seekers who perform the nine-pit yagna in the proper manner, raising the fire in their muladhara and joining it with the divine power at the sahasradalam, will, by divine grace, attain a state free of all thought and remain joined as one with the Lord.
திருமந்திரம் பாடல் #1035





