தொடர்ந்து படிக்கread this section continuously
பத்திட்டங் கெட்டிட்டு ஆறிட்டு நாலிட்டுமட்டிட்ட குண்டம் மலர்ந்தெழு தாமரைகட்டிட்டு நின்று கலந்தமெய் யாகமும்பட்டிட்டு நின்றது பார்ப்பதி பாலே.
உரைmeaning
பாடல் 1031 இல் உள்ளபடி, தமக்குள் அறிந்துகொண்ட இறைசக்தி, உடலினுள் ஆறு சக்கரங்களில் மேன்மை கொண்ட சக்தி மயங்களாக இருக்கிறது. நான்கு இதழ்கள் கொண்ட மூலாதாரத்தில் அடங்கியிருக்கும் குண்டலினியை நவகுண்ட யாகத்தின் மூலம் எழுப்பி, ஆறு இதழ்கள் கொண்ட சுவாதிட்டானம் வழியே மேலேற்றி, அதற்கு மேலிருக்கும் நான்கு சக்கரங்களிலும் ஒவ்வொன்றாக நிலை நிறுத்திக்கொண்டு சென்று, தலை உச்சியில் இருக்கும் ஏழாவது சக்கரமான சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் இறைசக்தியோடு கலந்துவிட்டால், சாதகம் செய்பவர்கள் இறைவனாகவே மாறிவிடுவதை, உலகத்தின் தலைவனாகிய இறைவனின் அருளால் உணர்ந்துகொள்வார்கள்.
As in verse 1031, the divine power known within oneself lies in the body's six chakras as exalted forms of power. If the kundalini held within the four petaled muladhara is raised through the nine-pit yagna, lifted up through the six petaled svadhisthana, made to stand steady one by one in each of the four chakras above it, and joined with the divine power seated in the seventh chakra, the sahasradalam at the crown of the head, then those who perform this sadhana will, by the grace of the Lord who is master of the world, realize that they themselves have become the Lord.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் 1031 இல் உள்ளபடி, தமக்குள் அறிந்துகொண்ட இறைசக்தி, உடலினுள் ஆறு சக்கரங்களில் மேன்மை கொண்ட சக்தி மயங்களாக இருக்கிறது.
As in verse 1031, the divine power known within oneself lies in the body's six chakras as exalted forms of power.
- வரி 2Line 2
நான்கு இதழ்கள் கொண்ட மூலாதாரத்தில் அடங்கியிருக்கும் குண்டலினியை நவகுண்ட யாகத்தின் மூலம் எழுப்பி, ஆறு இதழ்கள் கொண்ட சுவாதிட்டானம் வழியே மேலேற்றி,
If the kundalini held within the four petaled muladhara is raised through the nine-pit yagna, lifted up through the six petaled svadhisthana,
- வரி 3Line 3
அதற்கு மேலிருக்கும் நான்கு சக்கரங்களிலும் ஒவ்வொன்றாக நிலை நிறுத்திக்கொண்டு சென்று, தலை உச்சியில் இருக்கும் ஏழாவது சக்கரமான சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் இறைசக்தியோடு கலந்துவிட்டால்,
made to stand steady one by one in each of the four chakras above it, and joined with the divine power seated in the seventh chakra, the sahasradalam at the crown of the head,
- வரி 4Line 4
சாதகம் செய்பவர்கள் இறைவனாகவே மாறிவிடுவதை, உலகத்தின் தலைவனாகிய இறைவனின் அருளால் உணர்ந்துகொள்வார்கள்.
then those who perform this sadhana will, by the grace of the Lord who is master of the world, realize that they themselves have become the Lord.
திருமந்திரம் பாடல் #1032





