திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1033

தொடர்ந்து படிக்கread this section continuously

பார்ப்பதி பாகன் பரந்தகை நாலைஞ்சுகாற்பதி பத்து முகம்பத்துக் கண்களும்பூப்பதி பாதம் இரண்டு சுடர்முடிநாற்பது சோத்திரம் நல்லிரு பத்தஞ்சே.

உரை

பாடல் 1032 இல் உள்ளபடி, தம்மை இறைவனாக உணர்ந்த சாதகர்களுக்குள் ஒரு பாகமாக இருக்கும் இறைவன், இருபது கைகள், இருபது கால்கள், பத்து முகங்கள், இருபது கண்கள், மலர் போன்ற இரண்டு திருவடிகள், அடிமுடியாக இருக்கும் இரண்டு சுடரொளி ஆகியவற்றைக் கொண்டவராக இருப்பார். நன்மையே ஆகிய இந்த இறைவனைத் தஞ்சம் என்று சரணடைவார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் 1032 இல் உள்ளபடி, தம்மை இறைவனாக உணர்ந்த சாதகர்களுக்குள் ஒரு பாகமாக இருக்கும் இறைவன்,

  • வரி 2

    இருபது கைகள், இருபது கால்கள், பத்து முகங்கள், இருபது கண்கள்,

  • வரி 3

    மலர் போன்ற இரண்டு திருவடிகள், அடிமுடியாக இருக்கும் இரண்டு சுடரொளி ஆகியவற்றைக் கொண்டவராக இருப்பார்.

  • வரி 4

    நன்மையே ஆகிய இந்த இறைவனைத் தஞ்சம் என்று சரணடைவார்கள்.

திருமந்திரம் பாடல் #1033

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout