திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1031

தொடர்ந்து படிக்கread this section continuously

அந்தமில் லானுக் ககலிடந் தானில்லைஅந்தமில் லானை அளப்பவர் தாமில்லைஅந்தமில் லானுக் கடுத்தசொற் றானில்லைஅந்தமில் லானை அறிந்துகொள் பத்தே.

உரை

பாடல் 1030 இல் உள்ளபடி, நவகுண்டத்திலிருந்து எழுந்த முடிவில்லாத இறைசக்தி அண்டத்திலுள்ள அனைத்திலும் இருக்கிறது. அந்தச் சக்தியின் அளவை அளக்கக்கூடியவர் யாருமே இல்லை. அந்த இறைசக்தியைக் குறிக்கும் மந்திரத்திற்கு மேலான மந்திரம் வேறெதுவும் இல்லை. முடிவில்லாத இந்த இறைசக்தியை, நவகுண்டத்தின் மூலம் யாகம் செய்து தமக்குள் அறிந்துகொள்ளலாம்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் 1030 இல் உள்ளபடி, நவகுண்டத்திலிருந்து எழுந்த முடிவில்லாத இறைசக்தி அண்டத்திலுள்ள அனைத்திலும் இருக்கிறது.

  • வரி 2

    அந்தச் சக்தியின் அளவை அளக்கக்கூடியவர் யாருமே இல்லை.

  • வரி 3

    அந்த இறைசக்தியைக் குறிக்கும் மந்திரத்திற்கு மேலான மந்திரம் வேறெதுவும் இல்லை.

  • வரி 4

    முடிவில்லாத இந்த இறைசக்தியை, நவகுண்டத்தின் மூலம் யாகம் செய்து தமக்குள் அறிந்துகொள்ளலாம்.

திருமந்திரம் பாடல் #1031

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout