திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1026

தொடர்ந்து படிக்கread this section continuously

எந்தை பிரானுக்கு இருமூன்று வட்டமாய்த்தந்தைதன் முன்னே சண்முகம் தோன்றலால்கந்தன் சுவாமி கலந்தங்கு இருந்தலான்மைந்தன் இவனென்று மாட்டிக்கொள் ளீரே.

உரை

பாடல் 1025 இல் உள்ளபடி, அண்டசராசரங்கள் அனைத்திற்கும் தந்தையாகிய இறைவனோடு, இறைவனின் மகனாக ஆன்மாவும் இருக்கிறது. சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் பேரொளியான இறைவனை அறிவதற்கு முன், உடலுக்குள் சக்தி மயங்களாக இருக்கும் ஆறு சக்கரங்களையும் அறிந்துகொள்ள வேண்டும். உடலையே நவகுண்டமாகக் கொண்டு, அதிலுள்ள ஆறு சக்கரங்களிலும் அக்னி ஏற்றி யாகம் செய்தால், ஆன்மா இறைவனின் மகனாக இருப்பது தெரியவரும்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் 1025 இல் உள்ளபடி, அண்டசராசரங்கள் அனைத்திற்கும் தந்தையாகிய இறைவனோடு, இறைவனின் மகனாக ஆன்மாவும் இருக்கிறது.

  • வரி 2

    சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் பேரொளியான இறைவனை அறிவதற்கு முன், உடலுக்குள் சக்தி மயங்களாக இருக்கும் ஆறு சக்கரங்களையும் அறிந்துகொள்ள வேண்டும்.

  • வரி 3

    உடலையே நவகுண்டமாகக் கொண்டு, அதிலுள்ள ஆறு சக்கரங்களிலும் அக்னி ஏற்றி யாகம் செய்தால்,

  • வரி 4

    ஆன்மா இறைவனின் மகனாக இருப்பது தெரியவரும்.

திருமந்திரம் பாடல் #1026

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout