திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1027

தொடர்ந்து படிக்கread this section continuously

மாட்டிய குண்டத்தின் உள்ளெழு வேதத்துள்ஆட்டிய காலொன்றும் இரண்டும் அலர்ந்திடும்வாட்டிய கையிரண்டு ஒன்று பதைத்தெழுநாட்டும் சுரரிவர் நல்லொளி தானே.

உரை

நவகுண்டத்தினுள் எழும் அக்னியுடன், ஓதப்படும் மந்திரங்களும் ஒன்றாகச் சேர்ந்து எழும்புகின்றன. அவ்வாறு எழும்பும் அக்னி, அடியும் முடியுமாக, அதாவது நெருப்புச் சுடரின் அடிப்பாகமும் உச்சியுமாக, இரண்டாகக் குண்டத்திற்குள் அலைகிறது. அவ்வாறு அலையும் அக்னி ஒரு கையாகவும், காற்று மற்றொரு கையாகவும், இந்த இரு கைகளும் ஒன்றாகச் சேர்ந்து விரைவாக எரிகிறது. அப்படி விரைந்து எரியும் அந்த அக்னியில், நல்ல ஒளியாய்த் தேவர்கள் வந்து நின்று நல்லாசிகள் வழங்குவார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    நவகுண்டத்தினுள் எழும் அக்னியுடன், ஓதப்படும் மந்திரங்களும் ஒன்றாகச் சேர்ந்து எழும்புகின்றன.

  • வரி 2

    அவ்வாறு எழும்பும் அக்னி, அடியும் முடியுமாக, அதாவது நெருப்புச் சுடரின் அடிப்பாகமும் உச்சியுமாக, இரண்டாகக் குண்டத்திற்குள் அலைகிறது.

  • வரி 3

    அவ்வாறு அலையும் அக்னி ஒரு கையாகவும், காற்று மற்றொரு கையாகவும், இந்த இரு கைகளும் ஒன்றாகச் சேர்ந்து விரைவாக எரிகிறது.

  • வரி 4

    அப்படி விரைந்து எரியும் அந்த அக்னியில், நல்ல ஒளியாய்த் தேவர்கள் வந்து நின்று நல்லாசிகள் வழங்குவார்கள்.

திருமந்திரம் பாடல் #1027

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout