திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1025

தொடர்ந்து படிக்கread this section continuously

முக்கணன் றானே முழுச்சுட ராயவன்அக்கணன் றானே அகிலமும் உண்டவன்திக்கண னாகி திசையெட்டுங் கண்டவன்எக்கணன் றானுக்கும் எந்தை பிரானே.

உரை

பாடல் 1024 இல் உள்ளபடி மூன்று கண்களையுடைய இறைவனே உடலாகிய குண்டத்தில் எழும் முழுமையான சுடராகவும் இருக்கிறான். அந்த முக்கண் இறைவனே எட்டுத் திசைகளுக்கும் கண்களை உடையவனாய் இருந்து எட்டுத் திசைகளையும் கண்டு, எல்லா உலகங்களையும் அவற்றிலிருக்கும் உயிர்களையும் தன்னுள் அடக்கிக்கொண்டு, எல்லா தேவர்களுக்கும் தேவகணங்களுக்கும் தலைவனாக இருக்கிறான். இவனே நம் அனைவரையும் சேர்த்து அண்டசராசரங்கள் அனைத்திற்கும் தந்தையாகவும் இருக்கிறான்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் 1024 இல் உள்ளபடி மூன்று கண்களையுடைய இறைவனே உடலாகிய குண்டத்தில் எழும் முழுமையான சுடராகவும் இருக்கிறான்.

  • வரி 2

    அந்த முக்கண் இறைவனே எட்டுத் திசைகளுக்கும் கண்களை உடையவனாய் இருந்து எட்டுத் திசைகளையும் கண்டு,

  • வரி 3

    எல்லா உலகங்களையும் அவற்றிலிருக்கும் உயிர்களையும் தன்னுள் அடக்கிக்கொண்டு, எல்லா தேவர்களுக்கும் தேவகணங்களுக்கும் தலைவனாக இருக்கிறான்.

  • வரி 4

    இவனே நம் அனைவரையும் சேர்த்து அண்டசராசரங்கள் அனைத்திற்கும் தந்தையாகவும் இருக்கிறான்.

திருமந்திரம் பாடல் #1025

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout