தொடர்ந்து படிக்கread this section continuously
நல்லதென் றாளே நமக்குற்ற நாயகஞ்சொல்லதென் றாளே சுடர்முடி பாதமாமெல்லநின் றாளை வினவகில் லாதவர்கல்லதன் றாளையுங் கற்குறுமின் னாளே.
உரைmeaning
பாடல் #1021 இல் உள்ளபடி நன்மை தரும் சுடர் இது என்று அருளிய சக்தியே, சாதகருக்குள் அனைத்தையும் இயக்குகின்ற மந்திரங்களையும் தானாகவே இயக்கி, அந்த மந்திரங்களாகவே தலை முதல் பாதம் வரை அருளோடு நிற்கின்றாள். அப்படி நிற்கின்ற சக்தியின் அருளைத் தேடி அடையாமல், தாம் கற்றுக்கொண்ட மந்திரங்களை மட்டும் ஓதி ஹோமம் செய்பவர்கள் அவளுடைய ஆற்றலை உணரமாட்டார்கள் என்று இப்பாடல் கூறுகிறது.
As in verse 1021, that very Sakti, who graced that this is a beneficial flame, herself sets in motion every mantra that operates within the seeker, and stands, gracing him, as those very mantras from head to foot. Those who, without seeking and attaining the grace of Sakti who stands so, merely recite the mantras they have learned and perform the fire rite, will not perceive her power, this verse declares.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1021 இல் உள்ளபடி நன்மை தரும் சுடர் இது என்று அருளிய சக்தியே, சாதகருக்குள் அனைத்தையும் இயக்குகின்ற மந்திரங்களையும் தானாகவே இயக்கி,
As in verse 1021, that very Sakti, who graced that this is a beneficial flame, herself sets in motion every mantra that operates within the seeker,
- வரி 2Line 2
அந்த மந்திரங்களாகவே தலை முதல் பாதம் வரை அருளோடு நிற்கின்றாள்.
and stands, gracing him, as those very mantras from head to foot.
- வரி 3Line 3
அப்படி நிற்கின்ற சக்தியின் அருளைத் தேடி அடையாமல்,
Those who, without seeking and attaining the grace of Sakti who stands so,
- வரி 4Line 4
தாம் கற்றுக்கொண்ட மந்திரங்களை மட்டும் ஓதி ஹோமம் செய்பவர்கள் அவளுடைய ஆற்றலை உணரமாட்டார்கள்.
and merely recite the mantras they have learned and perform the fire rite, will not perceive her power.
திருமந்திரம் பாடல் #1022





