தொடர்ந்து படிக்கread this section continuously
நற்சுட ராகுஞ் சிரமுக வட்டமாங்கைச்சுட ராகுங் கருத்துற்ற கைகளிற்பைச்சுடர் மேனி பதைப்புற் றிலிங்கமும்நற்சுட ராயெழு நல்லதென் றாளே.
உரைmeaning
பாடல் #1020 இல் உள்ளபடி அறிந்துகொண்ட சுடரின் உச்சிக் கொழுந்தின் மேற்பகுதி வட்டவடிவ முகமாகவும், சுடரைச் சுற்றிலும் பரவும் நெருப்புக் கதிர்கள் கைகளாகவும், சுடரின் நடுவில் இருக்கும் அழகிய பகுதி உடலாகவும் கொண்டு அசைகின்ற அந்தச் சுடரே சிவலிங்க வடிவமாக இருக்கிறது. இந்தச் சிவலிங்க வடிவில் எழுகின்ற நல்ல சுடர் நன்மையைத் தரும் என்று சக்தி அருளினாள் என்று இப்பாடல் கூறுகிறது.
As known in verse 1020, that flame's crest, its uppermost part, is like a round face, the fire rays spreading around the flame are like hands, and the beautiful part at the flame's centre is like a body, and this flame, moving so, is itself in the form of a Shivalinga. Sakti graced that the good flame that rises in this form of the Shivalinga bestows goodness, this verse declares.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1020 இல் உள்ளபடி அறிந்துகொண்ட சுடரின் உச்சிக் கொழுந்தின் மேற்பகுதி வட்டவடிவ முகமாகவும்,
As known in verse 1020, that flame's crest, its uppermost part, is like a round face,
- வரி 2Line 2
சுடரைச் சுற்றிலும் பரவும் நெருப்புக் கதிர்கள் கைகளாகவும்,
the fire rays spreading around the flame are like hands,
- வரி 3Line 3
சுடரின் நடுவில் இருக்கும் அழகிய பகுதி உடலாகவும் கொண்டு அசைகின்ற அந்தச் சுடரே சிவலிங்க வடிவமாக இருக்கிறது.
and the beautiful part at the flame's centre is like a body, and this flame, moving so, is itself in the form of a Shivalinga.
- வரி 4Line 4
இந்தச் சிவலிங்க வடிவில் எழுகின்ற நல்ல சுடர் நன்மையைத் தரும் என்று சக்தி அருளினாள்.
Sakti graced that the good flame that rises in this form of the Shivalinga bestows goodness.
திருமந்திரம் பாடல் #1021





