திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1018

தொடர்ந்து படிக்கread this section continuously

கொண்டஇக் குண்டத்தின் உள்ளெழு சோதியால்அண்டங்கள் ஈரேழு மாக்கி அழிக்கலாம்பண்டையுள் வேதம் பரந்த பரப்பெலாம்இன்றுசொல் நூலாய் எடுத்துஉரைத் தேனே.

உரை

பாடல் #1017 இல் உள்ளபடி யாம் அறிந்து அடைந்த குண்டமாகிய எமது உடலுக்குள் இருந்து எழுந்த சோதியின் மூலமாக, பதினான்கு (ஈரேழு) அண்டங்களையும் உருவாக்கவும் அழிக்கவும் செய்யலாம். ஆதிகாலத்திலிருந்தே அருளப்பட்ட வேதங்களாகவும், பரந்து விரிந்திருக்கும் உலகங்களாகவும் இருக்கும் அந்தச் சோதியை, யாம் இன்று ஒரு நூலாகத் தொகுத்து எடுத்துரைத்தோம் என்று இப்பாடல் கூறுகிறது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1017 இல் உள்ளபடி யாம் அறிந்து அடைந்த குண்டமாகிய எமது உடலுக்குள் இருந்து எழுந்த சோதியின் மூலமாக,

  • வரி 2

    பதினான்கு அண்டங்களையும் உருவாக்கவும் அழிக்கவும் செய்யலாம்.

  • வரி 3

    ஆதிகாலத்திலிருந்தே அருளப்பட்ட வேதங்களாகவும் பரந்து விரிந்திருக்கும் உலகங்களாகவும் இருக்கும் அந்தச் சோதியை,

  • வரி 4

    யாம் இன்று ஒரு நூலாகத் தொகுத்து எடுத்துரைத்தோம்.

திருமந்திரம் பாடல் #1018

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout