தொடர்ந்து படிக்கread this section continuously
கண்டெழுந் தேன்கம லம்மல ருள்ளிடைகொண்டெழுந் தேன்உடன் கூடிய காலத்துப்பண்டழி யாத பதிவழி யேசென்றுநண்பழி யாமே நமவென லாமே.
உரைmeaning
பாடல் 991 இல் உள்ளபடி இதயத்தாமரைக்குள் சக்கரத்தை வைத்துப் பலகாலம் சாதகம் செய்து உயர்ந்த உணர்வு பெற்று, ஆதியிலிருந்தே அழியாமல் என்றும் உடனிருக்கும் இறைவனைக் கண்டுகொண்டு, அவன் காட்டிய வழியே சென்று, என்றும் அழியாமல் அவனையே சரணாகதி என்று இருக்கலாம் என்று இப்பாடல் கூறுகிறது.
This verse declares that, as in verse 991, placing the chakra within the heart-lotus and practicing sadhana over a long time, gaining an exalted realization, one may come to see God, who has stood imperishable and ever-present from the beginning, and, following the path he shows, abide forever unperishing with him alone as refuge.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் 991 இல் உள்ளபடி இதயத்தாமரைக்குள் சக்கரத்தை வைத்து,
This verse declares that, as in verse 991, placing the chakra within the heart-lotus,
- வரி 2Line 2
பலகாலம் சாதகம் செய்து உயர்ந்த உணர்வு பெற்று,
practicing sadhana over a long time and gaining an exalted realization,
- வரி 3Line 3
ஆதியிலிருந்தே அழியாமல் என்றும் உடனிருக்கும் இறைவனைக் கண்டுகொண்டு, அவன் காட்டிய வழியே சென்று,
one may come to see God, who has stood imperishable and ever-present from the beginning, and, following the path he shows,
- வரி 4Line 4
என்றும் அழியாமல் அவனையே சரணாகதி என்று இருக்கலாம் என்று இப்பாடல் கூறுகிறது.
abide forever unperishing with him alone as refuge.
திருமந்திரம் பாடல் #992





