தொடர்ந்து படிக்கread this section continuously
மருவும் சிவாயமே மன்னும் உயிரும்அருமந்த போகமும் ஞானமும் ஆகும்தெருள்வந்த சீவனார் சென்றுஇவற் றாலேஅருள்தங்கி அச்சிவமம் ஆவது வீடே.
உரைmeaning
பாடல் 978 இல் உள்ளபடி மாறிய மந்திரமே, உலகிலுள்ள அனைத்து உயிர்களாகவும், அரிதாகக் கிடைக்கும் யோகமாகவும், ஞானமாகவும் இருக்கின்றது. தெளிவு பெற்ற ஆன்மா, அந்த வழியே சென்று, இறையருள் நிலைபெற்று, தானே சிவமாவதே வீடு (முக்தி) ஆகும்.
The mantra transposed as in verse 978 itself becomes all the souls of the world, the rare yoga, and the knowledge. This verse declares that the soul that has gained clarity, going by that path, with divine grace made firm within it, itself becoming Siva, is liberation.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் 978 இல் உள்ளபடி மாறிய மந்திரமே உலகிலுள்ள அனைத்து உயிர்களாகவும் ஆகின்றது;
The mantra transposed as in verse 978 itself becomes all the souls of the world,
- வரி 2Line 2
அரிதாகக் கிடைக்கும் யோகமாகவும், ஞானமாகவும் ஆகின்றது.
and the rare yoga, and the knowledge.
- வரி 3Line 3
தெளிவு பெற்ற ஆன்மா அந்த வழியே சென்று,
This verse declares that the soul that has gained clarity, going by that path,
- வரி 4Line 4
இறையருள் தன்னுள் நிலைபெற்று, தானே சிவமாவதே வீடு ஆகும் என்று இப்பாடல் கூறுகிறது.
with divine grace made firm within it, itself becoming Siva, is liberation.
திருமந்திரம் பாடல் #979





