தொடர்ந்து படிக்கread this section continuously
விந்துவி லுஞ்சுழி நாதம் எழுந்திடப்பந்தத் தலை பதினாறு கலையதாங்கந்தர வாகரங் காலுடம் பாயினாள்அந்தமும் இன்றியே ஐம்பத்தொன் றாயதே.
உரைmeaning
திருவம்பலச் சக்கரத்தில் ஒளியைச் சுற்றியிருக்கும் ஒலியை எழுப்பினால், அதிலிருந்து வெளிப்படும் சக்தி பதினாறு கலைகளாகப் பிரிந்து, திருவம்பலச் சக்கரத்தின் தலை (மேல் பகுதி), உடல் (நடுப் பகுதி), கால் (கீழ்ப் பகுதி) என்று பல அங்கங்களாகச் செயலாற்றுகிறது. என்றும் முடிவில்லாமல் இயங்கிக்கொண்டிருக்கும் இந்தச் சக்திமயமே திருவம்பலச் சக்கரத்தில் இருக்கும் ஐம்பத்தொரு எழுத்துக்களாக இருக்கிறது.
If one awakens the sound that surrounds the light in the sacred Ambalam chakra, the power that issues forth from it divides into sixteen parts and functions as the many limbs of the sacred Ambalam chakra, its head, the upper part, its body, the middle part, and its feet, the lower part. This power, which functions without end forever, is itself the fifty-one letters present in the sacred Ambalam chakra.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
விந்துவி லுஞ்சுழி நாதம் எழுந்திடப் என்பது, திருவம்பலச் சக்கரத்தில் ஒளியைச் சுற்றியிருக்கும் ஒலியை எழுப்புவதைச் சொல்லும்.
If one awakens the sound that surrounds the light in the sacred Ambalam chakra,
- வரி 2Line 2
பந்தத் தலை பதினாறு கலையதாங் என்பது, அதிலிருந்து வெளிப்படும் சக்தி பதினாறு கலைகளாகப் பிரிந்து முதலில் தலைப் பகுதியில் செயலாற்றுவதைச் சொல்லும்.
the power that issues forth from it divides into sixteen parts, first at the head, the upper part,
- வரி 3Line 3
கந்தர வாகரங் காலுடம் பாயினாள் என்பது, அது உடல் நடுப் பகுதியிலும் கால் கீழ்ப் பகுதியிலும் பல அங்கங்களாகச் செயலாற்றுவதைச் சொல்லும்.
and functions through the body, the middle part, and the feet, the lower part, as its many limbs.
- வரி 4Line 4
அந்தமும் இன்றியே ஐம்பத்தொன் றாயதே என்பது, என்றும் முடிவில்லாமல் இயங்கும் இந்தச் சக்திமயமே திருவம்பலச் சக்கரத்தில் இருக்கும் ஐம்பத்தொரு எழுத்துக்களாக இருப்பதைச் சொல்லும்.
This power, which functions without end forever, is itself the fifty-one letters present in the sacred Ambalam chakra.
திருமந்திரம் பாடல் #964





