திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 970

நான்காம் தந்திரம்2. திருவம்பலச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

வேரெழத் தாய்விண்ணாய் அப்புறமாய் நிற்கும்நீரெழுத் தாய்நிலந் தாங்கியும் அங்குளன்சீரெழுத் தாய்அங்கி யாய்உயி ராம்எழுத்துஓரெழுத்து ஈசனும் ஓண்சுட ராமே.

உரை

அனைத்து எழுத்துக்களுக்கும் வேராக இருக்கும் எழுத்தாகவும், வானமாகவும் அதைத் தாண்டி இருக்கும் அண்ட சராசரங்களாகவும், நீரைக் குறிக்கும் எழுத்தாகவும், நிலத்தைத் தாங்கி நிற்கும் எழுத்தாகவும், நெருப்பைக் குறிக்கும் எழுத்தாகவும், உயிர்க்காற்றைக் குறிக்கும் எழுத்தாகவும், இப்படி ஐம்பூதங்களிலும் ஐந்தெழுத்து மந்திர வடிவாக இருக்கும் இறைவனே, ஓர் எழுத்தின் வடிவில் பேரொளிப் பிழம்பாகவும் இருக்கின்றான்.

வரி வாரியாக

  • வரி 1

    அனைத்து எழுத்துக்களுக்கும் வேராக இருக்கும் எழுத்தாகவும், வானமாகவும், அதைத் தாண்டி இருக்கும் அண்ட சராசரங்களாகவும்,

  • வரி 2

    நீரைக் குறிக்கும் எழுத்தாகவும், நிலத்தைத் தாங்கி நிற்கும் எழுத்தாகவும்,

  • வரி 3

    நெருப்பைக் குறிக்கும் எழுத்தாகவும், உயிர்க்காற்றைக் குறிக்கும் எழுத்தாகவும்,

  • வரி 4

    இவ்வாறு ஐம்பூதங்களுக்குள்ளும் ஐந்தெழுத்து மந்திர வடிவாக இருக்கும் இறைவனே, ஓர் எழுத்தின் வடிவில் பேரொளிப் பிழம்பாகவும் இருக்கின்றான்.

திருமந்திரம் பாடல் #970

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout