தொடர்ந்து படிக்கread this section continuously
நவமுஞ் சிவமும் உயிர்பர மாகும்தவமொன் றிலாதன தத்துவ மாகுஞ்சிவமொன்றி யாய்பவ ராதர வால்அச்சிவமென்ப தானெனுந் தெளி வுற்றதே.
உரைmeaning
'நமசிவாய', 'சிவாயநம' ஆகிய இரு மந்திரங்களுமே உயிர்கள் சிவமாவதற்குரிய மந்திரமாகும். இந்த ஐந்தெழுத்துக்கள் நிலைபெற்ற இறைவனின் திருவடிப்பேற்றைத் தரும் மெய்யுணர்வாகும். இந்த மெய்யுணர்வு பெற்று, சிவத்துடன் சேர்ந்த ஐந்தெழுத்தின் உண்மையால் பேரன்பு பூண்டவர்கள், தானும் அவனும் வேறில்லை என்னும் ஞானத் தெளிவு பெற்று, தாமே சிவமாகத் திகழ்வார்கள் என்று இப்பாடல் கூறுகிறது.
Both mantras, "Namasivaya" and "Sivayanama", are the mantra proper for souls to become Siva. These five letters, firmly established, are the true realization that grants the attainment of God's sacred feet. This verse declares that those who gain this true realization, and who, through the truth of the five letters joined with Siva, bear great love, come to the clear wisdom that they and He are not different, and themselves shine forth as Siva.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
"நமசிவாய", "சிவாயநம" ஆகிய இரு மந்திரங்களுமே உயிர்கள் சிவமாவதற்குரிய மந்திரமாகும்.
Both mantras, "Namasivaya" and "Sivayanama", are the mantra proper for souls to become Siva.
- வரி 2Line 2
நிலைபெற்ற இந்த ஐந்தெழுத்துக்கள், இறைவனின் திருவடிப்பேற்றைத் தரும் மெய்யுணர்வாகும்.
These five letters, firmly established, are the true realization that grants the attainment of God's sacred feet.
- வரி 3Line 3
இந்த மெய்யுணர்வு பெற்று, சிவத்துடன் சேர்ந்த ஐந்தெழுத்தின் உண்மையால் பேரன்பு பூண்டவர்கள்,
This verse declares that those who gain this true realization, and who, through the truth of the five letters joined with Siva, bear great love,
- வரி 4Line 4
தானும் அவனும் வேறில்லை என்னும் ஞானத் தெளிவு பெற்று, தாமே சிவமாகத் திகழ்வார்கள் என்று இப்பாடல் கூறுகிறது.
come to the clear wisdom that they and He are not different, and themselves shine forth as Siva.
திருமந்திரம் பாடல் #984





