தொடர்ந்து படிக்கread this section continuously
நின்றது சக்கரம் நீளும் புவியெல்லாம்மன்றது வாய்நின்ற மாயநன் னாடனைக்கன்றது வாகக் கறந்தனன் நந்தியுங்குன்றிடை நின்றிடுங் கொள்கைய னாமே.
உரைmeaning
முன்பு சொன்னபடி ஐம்பூதங்களுடன் அமைக்கப்பட்ட சக்கரத்தைப் போலவே, சாதகருடைய உடலில் இருக்கும் ஐம்பூதங்களும் இறைவன் ஆடுகின்ற மன்றங்களாக இருக்கின்றன; சாதகருடைய ஆன்மா இறைவனோடு இணைந்தே இருக்கிறது. ஆனால் மாயையால், இறைவனோடு கலந்திருக்கிறோம் என்பதை அறியாமல் தனித்திருப்பதைப் போன்ற மயக்கத்திலும் இருக்கிறது. இந்தச் சக்கரத்தை முறைப்படி செபிக்கும் சாதகர்களுடைய ஆன்மா கன்றாக இருந்து, பசுவாக இருக்கும் இறைவனிடம் ஞானப் பாலை அருந்துகிறது. அதன் பிறகு சாதகருடைய தலை உச்சியில் இருக்கும் சகஸ்ரதளத்தில் இறைவன் ஜோதி உருவமாகத் தரிசனம் தந்து, சாதகருடைய ஆன்மாவும் தாமும் ஒன்றே என்னும் கொள்கையை உணர வைப்பார்.
Just as the chakra is set up together with the five elements as described before, the five elements present in the seeker's own body also serve as the courts in which God dances, and the seeker's soul remains united with God. Yet, through maya, the soul also remains in a confusion like that of one standing apart, not knowing that it is already blended with God. The soul of the seeker who chants this chakra in the proper manner becomes as a calf and drinks the milk of wisdom from God, who stands as the cow. After that, at the Sahasradala at the crown of the seeker's head, God grants a vision of himself in the form of light, and makes the seeker realize the truth that the seeker's soul and God himself are one.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
முன்பு சொன்னபடி ஐம்பூதங்களுடன் அமைக்கப்பட்ட சக்கரத்தைப் போலவே, சாதகருடைய உடலில் இருக்கும் ஐம்பூதங்களும் இறைவன் ஆடுகின்ற மன்றங்களாக இருக்கின்றன; சாதகருடைய ஆன்மா இறைவனோடு இணைந்தே இருக்கிறது.
Just as the chakra is set up together with the five elements as described before, the five elements present in the seeker's own body also serve as the courts in which God dances, and the seeker's soul remains united with God.
- வரி 2Line 2
ஆனால் மாயையால், இறைவனோடு கலந்திருக்கிறோம் என்பதை அறியாமல் தனித்திருப்பதைப் போன்ற மயக்கத்திலும் இருக்கிறது.
Yet through maya, the soul remains in a confusion like that of one standing apart, not knowing it is already blended with God.
- வரி 3Line 3
இந்தச் சக்கரத்தை முறைப்படி செபிக்கும் சாதகர்களுடைய ஆன்மா கன்றாக இருந்து, பசுவாக இருக்கும் இறைவனிடம் ஞானப் பாலை அருந்துகிறது.
The soul of the seeker who chants this chakra in the proper manner becomes as a calf and drinks the milk of wisdom from God, who stands as the cow.
- வரி 4Line 4
அதன் பிறகு சாதகருடைய தலை உச்சியில் இருக்கும் சகஸ்ரதளத்தில் இறைவன் ஜோதி உருவமாகத் தரிசனம் தந்து, சாதகருடைய ஆன்மாவும் தாமும் ஒன்றே என்னும் கொள்கையை உணர வைப்பார்.
Then, at the Sahasradala at the crown of the head, God grants a vision of himself as light, making the seeker realize that the seeker's soul and God are one.
திருமந்திரம் பாடல் #948





